Published:Updated:

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை மீண்டும் ஒப்புதல்!

புதுடெல்லி: நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையிலும், பாஜக மத்திய அரசு மீண்டும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது.  

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில்,  சில திருத்தங்களை செய்து, நிலம் கையகப்படுத்த வகை செய்யும் புதிய மசோதாவை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக  கூட்டணி அரசு கொண்டு வந்தது.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் மசோதாவை நிறைவேற்ற முடியாததால், நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை இரண்டாவது முறையாக  கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு பிறப்பித்தது.

அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டால், அது தொடர்பான மசோதாவை பாராளுமன்றத்தில் 6 மாதங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். பாராளுமன்ற மக்களவையில் ஆளும் பாஜக  கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் அங்கு இந்த மசோதா எளிதாக நிறைவேறிவிட்டது.

ஆனால் மாநிலங்களவையில்  பா.ஜனதா கூட்டணிக்குப்  போதிய அளவிற்குப்  பெரும்பான்மை பலம் இல்லை. இதனாலும்,  எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாததாலும் மாநிலங்களவையில்  மசோதாவை தாக்கல் செய்வதில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியது. மேலும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளைச் சந்தித்து வருகிறார்.அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து, மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகளை அணி திரட்டி வருகிறார்.

இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு பிறப்பித்த நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் வரும் ஜூன் 4 ஆம் தேதியுடன் காலாவதி ஆவதால், மீண்டும் நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்தை பிறப்பிக்க மத்திய அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.

பிரதமர் மோடியின் இல்லத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

அடுத்த கட்டுரைக்கு