Published:Updated:

ஐஐடி மாணவர் அமைப்புக்கு தடை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

ஐஐடி மாணவர் அமைப்புக்கு தடை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
ஐஐடி மாணவர் அமைப்புக்கு தடை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

ஐஐடி மாணவர் அமைப்புக்கு தடை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

புதுச்சேரி: சென்னை ஐ.டி.ஐ.யில் அம்பேத்கர் - பெரியார்  வாசகர் வட்டத்தை தடை செய்தி ருப்பது பேச்சுரிமைக்கு எதிரான செயல் என இந்திய கம்யூனிஸ்ட்  கருத்து தெரிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக் குழு கூட்டம், சுப்பையா இல் லத்தில் இன்று நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாரயணா, மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் நல்லக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஐஐடி மாணவர் அமைப்புக்கு தடை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

நிகழ்ச்சி முடிவில் பத்திரிகையாளர்களிடம் பேசிய நல்லக்கண்ணு, ‘’ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு இல்லை. இடைத்தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதைப் பற்றி முடிவு செய்ய வரும் 1-ம் தேதி நடக்க இருக்கும் இடதுசாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் வன்மையாகக் கண்டிக்கிறது. அரசின் இது மாதிரியான செயல்கள் பேச்சுரிமைக்கு எதிரானது’’ என்றார்.

-ஜெ.முருகன்

படம்: ஆ.குருஸ்தனம்

அடுத்த கட்டுரைக்கு