Published:Updated:

ஐஐடி மாணவர் அமைப்புக்கு தடை விதித்தது வரவேற்கத்தக்கது: பாஜக

மதுரை: சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் மற்றும் பெரியார் வாசகர் வட்டம் அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி.யில் இயங்கி வந்த அம்பேத்கர் மற்றும் பெரியார் வாசகர் வட்டம் அமைப்புகளுக்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் தடை விதித்தது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''மாணவ சமுதாயம் அனைத்தையும் சிந்தித்து நடக்க வேண்டும். மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.

ஐஐடி மாணவர் அமைப்புக்கு தடை விதித்தது வரவேற்கத்தக்கது: பாஜக

சென்னை ஐ.ஐ.டி. மாணவர் பிரச்னையை அரசியல் ஆக்கக்கூடாது. மத்திய அரசு, மாணவர்களுக்காக எப்போதும் துணை நிற்கும்'' என்றார்.

பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், ''சென்னை ஐ.ஐ.டி.யில் இயங்கி வந்த அம்பேத்கர் மற்றும் பெரியார் வாசகர் வட்டம் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியை முறைப்படி கற்காமல், வீதிக்கு வந்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை கேவலமாக விமர்சித்து வந்தனர்.

எனவே, அந்த அமைப்பின் மீது கடந்த 6 மாதத்திற்கு முன்பே நான் புகார் கூறியிருந்தேன். ஆனால், இப்போதுதான் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது காலதாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்றாலும், நான் அதை வரவேற்கிறேன்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு