Published:Updated:

மியான்மர் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு சீமான் கண்டனம்: போராட்டம் அறிவிப்பு

மியான்மர் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு சீமான் கண்டனம்: போராட்டம் அறிவிப்பு
மியான்மர் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு சீமான் கண்டனம்: போராட்டம் அறிவிப்பு

மியான்மர் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு சீமான் கண்டனம்: போராட்டம் அறிவிப்பு

மியான்மர் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு சீமான் கண்டனம்: போராட்டம் அறிவிப்பு

சென்னை: மியான்மரில் முஸ்லிம்கள் தாக்கப் படுவதைக் கண்டித்தும் ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்துக்கு தடை விதிக்கப்பட் டதைக் கண்டித்தும் வரும் 5-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளி யிட்டு உள்ளது.

மியான்மரில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் புத்த மதத்தினராலும் அரசாங்கத்தினரா லும் கொடூரமாகக் கொல்லப்படுவதையும் மன சாட்சியற்ற தாக்குதலுக்கு ஆளாக்கப்படுவதை யும் நாம் தமிழர் கட்சி கடுமையாகக் கண்டிக்கி றது” என்று அந்த அறிக்கையில் சீமான் கூறியுள் ளார்.

மேலும்“ இந்த உலகம் இசுலாமியர்களுக்கானது அல்ல என்று சொல்லி, பௌத்தம் தன் கோர முகத்தைக் காட்டி நிற்கிறது. நூற்றாண்டு கால மாகத் தொடரும் இன வெறுப்பால் மியான்மரில் வசிக்கும் ரோகிங்கியா முஸ்லிம்கள் ஆற்றொ ணா துயரத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள். 'ஆசையே துன்பத்துக்குக் காரணம்', 'உயிர்களைக் கொல்வது பாவம்' என்றெல்லாம் சொன்ன புத்த பெருமானின் வார்த்தைகளைப் புறந்தள்ளிவிட்டு பச்சிளம் குழந்தைகளை வெட்டி வீசியும், எரிகிற தீயில் தூக்கிப் போட்டும் புத்த பிக்குகள் கொடுவாள் ஏந்தி கோர முகத்தைக் காட்டி வருகிறார்கள்.

'இது மியான்மரின் உள்நாட்டு விவாகாரம்' எனச் சொல்லி சீனா ஒதுங்கிக் கொள்ள, வழக்கம்போல் எவ்விதக் கருத்தும் சொல்லாமல் இந்தியா மௌனம் காக்கிறது.

இதனால், வங்காள தேசம், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட அக்கம்பக்க நாடுகளும் அகதிகளாக வெளியேறும் மியான்மர் முஸ்லிம்களுக்கு என்ன செய்வதெனத் தெரியாமல் கைகட்டி நிற்கின்றன. அகதியாக ஏற்கக்கூட எந்த நாடும் முன்வராததால் நடுக்கடலில் பல நாட்களாகத் தவிக்கும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களின் கண்ணீர், உலத்தின் பார்வையால் உணரப்படாமல் இருப்பது பேரவலம் அல்லவா? 'உலகில் மிக மோசமாக இன்னலுக்கு ஆளாக்கப்படும் அகதிகள் மியான்மரின் ரோஹிங்கியா முஸ்லிம்கள்தான்' என ஐ.நா.சபையே அறிவித்திருக்கிறது என்றால், அந்த மக்களின் துயர் எத்தகைய கொடுமையானதாக இருக்கும்?

மியான்மர் முஸ்லிம்கள் மீதான தாக்குதலைத் தடுத்து, அந்த மக்களுக்கான விடிவை உலக நாடுகளும் ஜனநாயக அமைப்புகளும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும். இனவெறிக் கொடூரங்களுக்கு முடிவுகட்ட உலகத்தின் மனசாட்சி உடனடியாக எழ வேண்டிய நேரம் இது.

மியான்மர் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு சீமான் கண்டனம்: போராட்டம் அறிவிப்பு

அதேபோல் சென்னையில் உள்ள‌ இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் செயல்படும் அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்துக்கு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை தடை விதித்திருப்பது கருத்துச் சுதந் திரத்தின் கழுத்தை நெரிக்கிற செயல். கல்வி பயில்கிற இடம்தான் ஒருவனை எல்லா விதத்திலும் பண்பட் டவனாகவும் தெளிவுகொண்டவனாகவும் மாற்றுகிற இடம்.

வெறும் படிப்பை மட்டும் அறிந்துகொள்ளாமல் சமூகம் குறித்த அத்தனை விதமான தெளிவுகளையும் மாணவர்கள் பெற இத்தகைய படிப்பு வட்டங்கள் அவசியத் தேவை. தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மத்திய பல்கலைக் கழகத்தில் அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்தைப் போன்ற நிறைய வட்டங்கள் செயல்படுகின்றன.

அப்படியிருக்க சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்தால் தேவையற்ற பதற்றம் உருவாக வாய்ப்பிருப்பதாகச் சொல்லி கடிதம் வந்ததாகவும், அதை யடுத்து அந்த படிப்பு வட்டத்துக்கு தடை பிறப்பித்திருப்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலை. மீனவர்கள் மீதான‌ தாக்குதல் தொடங்கி நீராதார சிக்கல்கள் வரை எத்தனையோ பிரச்னைகளுக்கு தமிழக முதலமைச் சர் அடிக்கடி பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார்.

மியான்மர் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு சீமான் கண்டனம்: போராட்டம் அறிவிப்பு

அதற்கெல்லாம் எந்த பதிலும் சொல்லாத மத்திய அரசு, பெயரைக்கூட குறிப்பிடாத ஒரு மொட்டைக் கடிதத்தை கையில் வைத்துக் கொண்டு அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்துக்கு தடை போடத் துடிப்பது எந்த விதத்தில் நியாயம்?.

நாட்டின் எதிர்காலத் தலைவர்களாக இன்றைய மாணவர்களே உருவெடுக்கப் போவதாகச் சொல்பவர்கள், அதற்கான களமாக விளங்கும் இத்தகைய படிப்பு வட்டங்களுக்குத் தடை விதிப்பது எந்த விதத்தில் சரி. ஆக்கபூர்வ கருத்து விவாதங்களையும் நிலம் கையகச் சட்டம் தொடங்கி மாட்டுக்கறி விவகாரம் வரையிலான சமூகப் பிரச்னைகள் குறித்த அலசல்களையும் அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்தினர் நடத்தி வருவது பொறுக்காமலே, மொட்டைக் கடிதம் என்கிற பெயரில் மாணவர் ஒருங்கிணைவுக்கு தடை போடத் துடிக்கிறது மோடி அரசு.

மியான்மர் முஸ்லிம்களைக் காப்பாற்றவும், அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்தின் மீதான தடையை உடனே ரத்து செய்யவும் வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 5-ம் தேதி மாலை 3 மணிக்கு நாம் தமிழர் கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறது” இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

 

 
 

அடுத்த கட்டுரைக்கு