Published:Updated:

பிரதமர் மோடியை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய காங். வலியுறுத்தல்!

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம், காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராஜேஷ் மிஸ்ரா மற்றும் காங்கிரஸ் தலைவர் புராஜா நாத் சர்மா ஆகியோர் சார்பில், காங்கிரஸ் கட்சியின் சட்டப்பிரிவு செயலாளர் கே.சி.மிஸ்ரா தேர்தல் ஆணையத்திடம், புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

பிரதமர் மோடியை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய காங். வலியுறுத்தல்!

அதில், ''கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, தேர்தல் செலவுகளை சரியான மற்றும் உண்மையான விதத்தில் தாக்கல் செய்யவில்லை.
 
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி தனது தேர்தல் அலுவலகத்திற்காக, 14 மாடி ஆடம்பர கட்டிடத்தை எடுத்துக்கொண்டார். அந்த அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஹைடெக் சீரமைப்பு பணிக்கு ரூ.2 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த செலவு பிரதமர் மோடியின் தேர்தல் செலவு கணக்கில் காட்டப்பட வேண்டும்.

மேலும், மோடியின் போக்குவரத்து செலவையும் தேர்தல் செலவு அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அதேபோல், வாரணாசி தொகுதியில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் செலவிடப்பட்ட தொகையும் காட்டப்பட வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக மோடிக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மோடியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய தேவைப்படும் நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு