Published:Updated:

பிரபாகரன் சிலை அகற்றம்: தமிழக அரசுக்கு பழ.நெடுமாறன் எச்சரிக்கை!

பிரபாகரன் சிலை அகற்றம்: தமிழக அரசுக்கு பழ.நெடுமாறன் எச்சரிக்கை!
பிரபாகரன் சிலை அகற்றம்: தமிழக அரசுக்கு பழ.நெடுமாறன் எச்சரிக்கை!

பிரபாகரன் சிலை அகற்றம்: தமிழக அரசுக்கு பழ.நெடுமாறன் எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சை: பிரபாகரன் சிலைகள், படங்களை வைத்தால் அதனை அகற்றும் போக்கை தமிழக அரசு திருத்திக்கொள்ளாவிட்டால் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதைவிட வேறு வழியில்லை என்று தஞ்சையில் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் எச்சரித்து உள்ளார்.

பிரபாகரன் சிலை அகற்றம்: தமிழக அரசுக்கு பழ.நெடுமாறன் எச்சரிக்கை!

உலகத் தமிழர் பேரமைப்பின் 8வது மாநாடு குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறனிடம் பிரபாகரன் சிலை அகற்றியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ''தமிழக அரசு தொடர்ந்து பிரபாகரன் சிலைகள், படங்களை வைத்தாலே அதை அகற்றிவிட்டு அவர்கள் மீது வழக்குப் போடுவதை தொடர் கதையாக செய்து வருகிறது.

தமிழக அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, ஜனநாயக உரிமைகளை தமிழக அரசு பறிக்கிறது. ஜனநாயக உரிமையை பறிக்கும் ஒரு அரசு, மக்களின் அரசாக இருக்க முடியாது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அ.தி.மு.க. அரசு பறிப்பது மிகவும் வருந்தத்தக்க செயலாகும்.

அதனால், இனிமேலாவது தமிழக அரசு தனது போக்கை திருத்திக்கொள்ள வேண்டும். அப்படி, திருத்திக்கொள்ளாவிட்டால் அரசுக்கு எதிராக போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவதைவிட வேறு வழியில்லை. இதை தமிழக அரசு உணர வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்" என்றார்.

ஏ.ராம்

படம்:
கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு