Published:Updated:

கூட்டணியிலிருந்து விலகுவோம்: பா.ஜ.க வுக்கு பாரிவேந்தர் திடீர் எச்சரிக்கை!

கூட்டணியிலிருந்து விலகுவோம்: பா.ஜ.க வுக்கு பாரிவேந்தர் திடீர் எச்சரிக்கை!
கூட்டணியிலிருந்து விலகுவோம்: பா.ஜ.க வுக்கு பாரிவேந்தர் திடீர் எச்சரிக்கை!

கூட்டணியிலிருந்து விலகுவோம்: பா.ஜ.க வுக்கு பாரிவேந்தர் திடீர் எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருச்சி: திராவிட கட்சிகளோடு கூட்டு சேர்ந்தால் பிஜேபி தலைமையிலான  தேசிய ஜனநாயக கூட்டணி யிலிருந்து விலகுவோம்  என  ஐஜேகே கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் கூறினார்.

வரும் சட்டசபை தேர்தல் கூட்டணி மற்றும் தேர்தலை எதிர்கொள்ளும் விதம் குறித்து தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டம் நடத்திவருகிறது.

கூட்டணியிலிருந்து விலகுவோம்: பா.ஜ.க வுக்கு பாரிவேந்தர் திடீர் எச்சரிக்கை!

திருச்சியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அக்கட்சியின் நிறுவ னர் பாரிவேந்தர்,  “ ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடாததற்கு பிஜேபியே காரணம். கூட்டணி கட்சியான பிஜேபி ஒத்துழைத்தால் இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் என நாங்கள் முன்பே அறிவித்திருந்தோம். ஆனால் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த பிஜேபி திடீரென இடைத் தேர்தலில் போட்டியில்லை என அறிவித்துள்ளது. முன்னமே அறிவித்திருந்தால் நாங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்து நிறுத்தியிருப்போம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “வருகின்ற 2021ல் எங்கள் கட்சி தமிழகத்தின் பலம் பொருந்திய, தமிழக அரசை தீர்மானிக்கும் கட்சியாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.  தமிழகத்தில் திராவிட கட்சிகளை ஒழிப்பது தான் இந்திய ஜனநாயக கட்சியின் முதற்கட்ட வேலை.

கடந்த 1967-ம் ஆண்டு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததில் இருந்து இன்றுவரை அதிமுக வும் திமுகவும் மாறிமாறி ஆட்சி செய்து தமிழகத்தை வீணாக்கிவிட்டார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது.

கூட்டணியிலிருந்து விலகுவோம்: பா.ஜ.க வுக்கு பாரிவேந்தர் திடீர் எச்சரிக்கை!

கடந்த 50 வருடங்களில் தமிழகம் எந்த முன்னேற்றமும் காண வில்லை. இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப் படவில்லை. இந்த இரண்டு  திராவிட கட்சிகளும் மதுவை ஒழிக்க எந்த நடவடிக் கையும் மேற்கொள்ளவில்லை. இந்த கட்சிகள் முதல்வர் நாற்காலி என்கிற மோகத்தில் மட்டுமே செயல்படு கின்றன.

இப்படி மக்கள் நலனில் அக்கறை இல்லாத கட்சிகளை ஒழிப்பது தான் எங்கள் வேலை. இனிவரும் காலங் களில் எங்களுடன் இப்போது தோழமையோடு உள்ள கட்சிகள் இந்த  திராவிட கட்சிகளோடு கைகோர்த்தால் நாங்கள் கூட்டணியிலிருந்து விலகுவோம்” என்றார் தடாலடியாக.

அதிமுகவுடன் பிஜேபி இணக்கம் காட்டும் சூழலில் திராவிட கட்சிகளோடு கூட்டு சேர்ந்தால் தேசிய ஜன நாயக கூட்டணி யிலிருந்து விலகுவோம் என இந்திய ஜனநாயக கட்சி அறிவித் திருப்பது பா.ஜ.க வை மிரட்டும் தொனியில் இருப்பது புது அரசியல் பரபரப்பிற்கு விதை போட்டுள்ளது.

- சி.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு