Published:Updated:

டெல்லி சட்டத்துறை அமைச்சர் திடீர் கைது; பரபரப்பு!

டெல்லி சட்டத்துறை அமைச்சர் திடீர் கைது; பரபரப்பு!
டெல்லி சட்டத்துறை அமைச்சர் திடீர் கைது; பரபரப்பு!

டெல்லி சட்டத்துறை அமைச்சர் திடீர் கைது; பரபரப்பு!

டெல்லி சட்டத்துறை அமைச்சர் திடீர் கைது; பரபரப்பு!

புதுடெல்லி: டெல்லி சட்டத்துறை  அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமர் இன்று திடீரென கைது செய்யப்பட்டார். போலி கல்விச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் சட்டத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் ஜிதேந்திர சிங் தோமரின்
எல்.எல்.பி பட்டப்படிப்பு சான்றிதழ் போலியானது என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்விவகாம் தொடர்பாக விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், இது தொடர்பாக
விளக்கம் அளிக்குமாறு பீகார் திலக் மஞ்சி பகால்பூர் பல்கலைகழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனையடுத்து பீகார் பல்கலைகழகம் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், தோமரின் பட்டப்படிப்பு சான்றிதழ் போலியானது என்றும், தங்களது பல்கலைகழக பதிவுகளில் சான்றிதழ் எதுவும் இல்லை என்றும், சான்றிதழில் உள்ள வரிசை எண் மற்றொரு நபரின் சான்றிதழுக்குரியது என்றும் தெரிவித்து இருந்தது. இதனையடுத்து ஜிதேந்திர சிங் தோமரின் சட்டப்படிப்பு சான்றிதழ் போலி என தெரியவந்தது. 

இந்நிலையில் போலி சான்றிதழ் வழங்கியது தொடர்பாக சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமரை போலீசார் கைது செய்து உள்ளனர். கைதுசெய்யப்பட்ட தோமர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில், ஜிதேந்தர் சிங் தோமருக்கு முறையான நோட்டீஸ் வழங்காமல் போலீசார் கைதுசெய்து உள்ளனர் என்று குற்றம் சாட்டிஉள்ளார். டெல்லியின் சட்டமந்திரி எந்த ஒரு முறையான நோட்டீஸ் மற்றும் தகவல் இன்றி கைது செய்யப்பட்டு உள்ளார்.

டெல்லி போலீஸார் மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் வருவதால், மோடி அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி டெல்லியில் ஆட்சியில் இல்லாமலும் மறைமுக ஆதிக்கம் செலுத்த முயல்கிறது" என குற்றம் சாட்டினார்.

அடுத்த கட்டுரைக்கு