Published:Updated:

சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்ய வேண்டும்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போராட்டம்!

சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்ய வேண்டும்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போராட்டம்!
சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்ய வேண்டும்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போராட்டம்!

சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்ய வேண்டும்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போராட்டம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்ய வேண்டும்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போராட்டம்!

ஹைதராபாத்: வாக்களிக்க பணம் கொடுத்த  புகாரில் சிக்கியுள்ள ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி விலக வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசார் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். 

ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானா மாநிலத்தில் நடந்த எம்.எல்.சி. தேர்தலின்போது,  நியமன எம்.எல்.ஏ. எல்வின்ஸ் ஸ்டீபன்சனை தங்கள் பக்கம் இழுக்க தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. ரேவந்த் ரெட்டி முயற்சி செய்தார்.

இதற்காக ரூ.5 கோடி பேரம்பேசி,  முதல் தவணையாக ரூ.50 லட்சம் கொடுக்க முயன்றபோது,  ரேவந்த் ரெட்டியும், அவரது 2 உதவியாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் பணம் கொடுக்க முயன்ற காட்சி வீடியோவாக வெளியானது. தற்போது அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கானா அரசின் நியமன எம்.எல்.ஏ. ஸ்டீபன்சனும் பேசியதாகக்  கூறப்படும் தொலைபேசி உரையாடல் வெளியானது.

இதை வெளியிட்ட தெலுங்குதேச முதல்வர்  சந்திரசேகரராவை கண்டித்து தெலுங்குதேசம் கட்சியினர் நேற்று ஆந்திர மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது பல்வேறு இடங்களில் சந்திரசேகரராவ் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது. டெலிபோனை ஒட்டுக் கேட்டதாக கூறி அவர் மீது 36 காவல் நிலையங்களில் தெலுங்குதேசம் கட்சியினர் புகார் செய்தனர்.

சந்திரபாபுநாயுடுவின் கட்சி எம்.எல்.ஏ.,  ஓட்டுக்கு பணம் கொடுத்ததற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு,  உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

சந்திரசேகரராவ் மகனும், தெலுங்கானா மாநில அமைச்சருமான தாரகராமா ராவ், ரகுவீராரெட்டி (காங்), ராமகிருஷ்ணா (இந்திய கம்யூனிஸ்ட்), ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

அதே போல பாஜக மேலிட தலைவர் முரளிதரராவ், தவறு செய்தவர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் இன்று ஓட்டுக்கு பணம் கொடுத்த சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி, ஆந்திரா முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. சந்திரபாபு நாயுடு நேர்மையானவர் என்றால் லஞ்சம் கொடுத்த எம்.எல்.ஏ.வை அவரது கட்சியில் இருந்து நீக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று டெல்லி சென்றார். அங்கு குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்  ராஜ்நாத்சிங் ஆகியோரை சந்தித்து ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு குறித்து புகார் செய்கிறார்.

இதனையடுத்து ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடுவும், டெல்லி செல்கிறார். ஆந்திர கவர்னர் நரசிம்மனும் டெல்லி செல்கிறார். இதனால் ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு