Published:Updated:

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி!
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி!

சென்னை: சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் 2015-2016 ஆம் கல்வி ஆண்டுக்கான  எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அனுமதியின் பேரில், எம்.பி.பி.எஸ். படிப்பில் 100 இடங்களுக்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இவர்களில் 85 பேர் தமிழ்நாடு பிரிவிலும்,  15 பேர் அகில இந்திய பிரிவிலும் அளவிலும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

சென்ற திமுக தலைமையிலான ஆட்சிக் காலத்தில், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. அதனையடுத்து அங்கு புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகள் ஆகியவை நடக்க தொடங்கின. அப்போதிருந்தே அதிமுக புதிய தலைமைச் செயலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. பின்னர் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று  ஆட்சிப் பொறுப் பேற்ற அதிமுக அரசு, அங்கு தலைமைச் செயலகத்துக்குப் பதிலாக பல்நோக்கு மருத்துவமனையையும், மருத்துவக் கல்லூரியையும் தொடங்கப்போவதாக அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில்,  இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது. அங்கு முதலில் மருத்துவமனைக்கு அனுமதி கிடைத்ததன் பேரில், தற்போது அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அங்கு மருத்துவக் கல்லூரி தொடங்கவும், நடப்பு கல்வி ஆண்டில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பில் 100 இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கும் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் விரைவுப் படுத்தப்பட்டுள்ளன.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு