Published:Updated:

சாதி மதம் சார்ந்தது அல்ல யோகா : ராஜ்நாத் சிங் கருத்து!

சாதி மதம் சார்ந்தது அல்ல யோகா : ராஜ்நாத் சிங் கருத்து!
சாதி மதம் சார்ந்தது அல்ல யோகா : ராஜ்நாத் சிங் கருத்து!

சாதி மதம் சார்ந்தது அல்ல யோகா : ராஜ்நாத் சிங் கருத்து!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சாதி மதம் சார்ந்தது அல்ல யோகா : ராஜ்நாத் சிங் கருத்து!

புதுடெல்லி: யோகாசனங்கள் சாதி  மதம் மற்றும்  இனம் சார்ந்த விஷயம் அல்ல என்றும், சர்வதேச யோகா தினத்தன்று யோகா செய்வது  கட்டாயமும் அல்ல என்றும் மத்திய உள்துறை அமைசர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்துள்ளார்.

வரும் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சூரிய நமஸ்காரம் செய்வதை முஸ்லீம் மாணவர்கள் மத்தியில்   திணிக்கக் கூடாது என்று  எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இது குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "யோகா என்பது சாதி, மத, இனம் சார்ந்தது அல்ல. சர்வதேச யோகா தினத்தன்று யோகா செய்வதும் கட்டாயமும் அல்ல" என விளக்கம் தெரிவித்துள்ளார்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு