Published:Updated:

மாயமான கடலோர படை விமானம் குறித்து புதிய தகவல்!

மாயமான கடலோர படை விமானம் குறித்து புதிய தகவல்!
மாயமான கடலோர படை விமானம் குறித்து புதிய தகவல்!

மாயமான கடலோர படை விமானம் குறித்து புதிய தகவல்!

மாயமான கடலோர படை விமானம் குறித்து புதிய தகவல்!

சென்னை: காணாமல் போன கடலோர காவல்படை விமானத்தை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அந்த விமானம் சிதம்பரம் சதுப்பு நிலக் காட்டிற்குள் விழுந்திருக்கலாம் என கடலோர காவல்படை ஐ.ஜி. சர்மா கூறியுள்ளார்.

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு கடல் வழியாக தீவிரவாதிகள் புகுந்து, பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தையடுத்து, நாடு முழுவதும் 6 மாதத்திற்கு ஒருமுறை 'ஆபரேஷன் ஆம்லா' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகளைப் போல் வேடமிட்டு கடலோர பகுதிகளுக்குள் ஊடுருவார்கள். அவர்களை உள்ளூர் போலீசாரும், கடலோர காவல் படையினரும் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் இந்த பாதுகாப்பு ஒத்திகை.

அதன்படி, இன்று 'ஆபரேஷன் ஆம்லா' நடக்கவிருந்தது. இதையடுத்து, நேற்று இரவு 8.30 மணியளவில் கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான டோர்னியர் ரக குட்டி விமானத்தில், சுபாஷ் சுரேஷ், எம்.கே.டோனி ஆகிய விமானிகளும், துணை கமாண்டர் வித்யாசாகரும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்ட அந்த விமானம், இரவு நாகையில் இருந்து சென்னைக்கு திரும்பியது. சென்னை வந்து கொண்டிருந்த அந்த விமானம் சுமார் 9.30 மணியளவில் திடீரென காணாமல் போனது. அதன்பின்னர் விமானம் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதில் பயணம் செய்த 3 பேரும் என்ன ஆனார்கள் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. காணாமல் போன விமானத்தின் சிக்னல் கடைசியாக திருச்சி ராடரில் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து டெல்லி உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடலோர காவல் படைக்கு சொந்தமான 5 கப்பல்களும், 4 கடற்படை கப்பல்களும் குட்டி விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

அதேபோல், 25 ஆயிரம் படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்களுக்கும், விமானம் குறித்து தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களையும் விமானத்தை தேடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 5 ஆயிரம் படகுகளில் ஆழ் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருக்கும் மீனவர்களையும், விமானத்தை தேடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் காணாமல் போன விமானம் குறித்து, கடலோர காவல்படை ஐ.ஜி. சார்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இரவு 9.23 மணிக்கு விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன், உடனடியாக தேடும் பணியை மேற்கொண்ட போதிலும், விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

கடற்படை, கடலோர காவல்படை ஆகியவற்றின் கப்பல்களும், அரக்கோணம் ராஜாளி கடற்படை தளத்தில் இருந்து விமானங்களும் தேடுதல் பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

கடைசியாக சிதம்பரத்திற்கு கிழக்கே 16 மைல் தொலைவில் 9 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தது ரேடாரில் பதவாகி உள்ளது. எனவே, அந்த பகுதிகளில் உள்ள சதுப்பு நிலக் காடுகளுக்குள் டோர்னியர் விமானம் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மாயமான விமானத்தை கண்டுபிடித்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார்.

கடலோர காவல்படை விமானம் டோர்னியர் காணாமல் போனதையடுத்து, இன்று நடக்கவிருந்த ஆபரேஷன் ஆம்லா ஒத்திகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி கடலில் விமானம்?

இதற்கிடையே, காரைக்கால் மீனவர்கள் சிலர், நேற்று இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, வானில் ஏதோ ஒரு பொருள் வெடித்து சிதறியது என்று கூறியுள்ளனர். அதேபோல், புதுச்சேரி அருகே நல்லவாடு, ரெட்டிச்சாவடி பகுதி கடலில் விமானத்தின் பாகம் போன்று ஒரு பொருள் கிடப்பதாக புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர் முகேஷ் என்பவர் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, இந்திய காவல்படை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அந்த பொருள் கிடக்கும் இடத்திற்கும் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு