Published:Updated:

திரிணாமுல் காங்கிரஸின் கோபம் தணியும்: பிரணாப்

விகடன் விமர்சனக்குழு
திரிணாமுல் காங்கிரஸின் கோபம் தணியும்: பிரணாப்
திரிணாமுல் காங்கிரஸின் கோபம் தணியும்: பிரணாப்

கொல்கத்தா, நவ.5,2011

திரிணாமுல் காங்கிரஸின் கோபம் தணியும்: பிரணாப்

திரிணாமுல் காங்கிரஸ் உடனான கருத்து வேறுபாடுகள் விரைவில் களையப்படும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

மேலும், பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியது குறித்து தாம் விரிவான விளக்கம் அளிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பெட்ரோல் விலையை உயர்த்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகளில் முக்கிய கூட்டணி கட்சியான தங்களிடம் காங்கிரஸ் கலந்து ஆலோசிப்பதில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார்.

அத்துடன், இந்த விவகாரத்தை முன்வைத்து கூட்டணியில் இருந்து விலகவும் தயாராக இருப்பதாக அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், கொல்கத்தாவில் தனது இல்லத்தில் நிருபர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, "பெட்ரோல் விலையைப் பொருத்தவரையில், எண்ணெய் நிறுவனங்களின் முடிவு தொடர்பாக விரைவில் விரிவான விளக்கம் அளிக்கவுள்ளேன்," என்றார்.

முன்னதாக, பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெறுவதற்கான சாத்தியம் இல்லை என்பதை பிரதமர் மன்மோகன் சிங் தனது பிரான்ஸ் பயணத்திலேயே நிருபர்களிடம் உறுதி செய்தது கவனிக்கத்தக்கது.

கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து கேட்டதற்கு, "எங்கள் மதிப்புமிக்க கூட்டணி கட்சி (திரிணாமுல் காங்கிரஸ்) கோபத்தில் இருக்கிறார்கள். பிரதமரை அவர்கள் சந்திப்பார்கள். இந்தப் விவகாரம் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்," என்றார் பிரணாப்.