சோனியாவின் இந்திரா அவதாரம்!

''பிரதமர் பதவி காலியில்லை! எனவே, அதற்கு விண்ணப்பிக்க வேண்டாம்'' என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறது காங்கிரஸ்! 'மன்மோகன் சிங் மண் குதிரை. அவரை நம்பி தேர்தலில் இறங்கவேண்டாம்!' என்ற சொந்த கட்சியினரின் எச்சரிக்கையை மீறி, அவரையே பிரதமர் வேட்பாளராக அறிவித் திருக்கிறார் சோனியா.

விலைவாசி ஏற்றம், மின்வெட்டு, அத்தியாவசியப் பொருட் களின் தட்டுப்பாடு, குண்டுவெடிப்பு... என்று காங்கிரஸ் ஆட்சி யில் மக்கள் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், 'எங்களுக்கே இன்னுமொரு முறை ஓட்டுப் போடுங்கள்!' என்று வாக்காளர்களிடம் போய், மன்மோகன் சிங் முகத்தைக் காட்டினால், பைசா பிரயோஜனம் இருக்காது என்பது காங்கிரஸ் காரர்களின் கருத்து. ஆனால், மன்மோகன் சிங் அது பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

கம்யூனிஸ்ட்களால் இதுநாள்வரை தடைப்பட்டுப் போயி ருந்த, 'சீர்த்திருத்தங்களை' சீக்கிரமாக செய்து முடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் அவர். இன்சூரன்ஸ், வங்கித்துறை, பென்ஷன் நிதி ஆகியவற்றில் தனியாரின் ஆதிக்கத்தை மேலும் அதிகப்படுத்த விரும்புகிறார் அவர். ''இன்சூரன்ஸ், வங்கித்துறை, பென்ஷன்... போன்ற சீர்த்திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவராது. காரணம், அதற்கு

நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் ஒப்புதலும் தேவை. அமெரிக்க ஒப்பந்தத்தை முன்வைத்து நடைபெற்ற ஓட்டெடுப்பில் ஜெயிப் பதற்கே... பல கட்சிகளுக்கு பலமாகப் படையல் வைக்க வேண்டியிருந்தது. மேற்கொண்டு எந்தக் கட்சிக்கும் படையல் வைக்க சோனியா தயாராக இல்லை. தவிர, மேலவையில் காங்கிரஸின் நிலைமை ரொம்பவும் கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. இப்போதைக்கு சோனியாவின் எண்ணமெல்லாம், தேர்தலுக்கு முன்பாக, விலைவாசியை எப்படி கட்டுக்குள் கொண்டுவருவது என்பதைப் பற்றி மட்டும்தான்'' என்று சொல்லும் ஜன்பத் விசுவாச சீனியர்கள், இதற்கு ஆதாரமாக கட்சியின் அதிகாரபூர்வ 'சந்தேஷ்' பத்திரிகையில் கட்சியினருக்கு சோனியா எழுதியிருக்கும் கடிதத்தைக் காட்டுகிறார்கள்.

''கார் வாங்க, வீடு வாங்க, ஷாப்பிங் பண்ண, வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல.... என்று என்ன காரணம் சொன்னாலும், வங்கிகள் பணத்தை வாரி வாரி கடனாகக் கொடுப்பதால்தான் பணவீக்கம் ஏற்படுகிறது. அதனால் வங்கி களின் நிதிநிலையை இறுக்கிப்பிடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கணக்கிட்டு, சோனியாவின் எண்ணப்படியே ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களையும் ஏற்றியிருக்கிறது'' என்கிறார்கள் இந்த ஜாம்பவான்கள்!

கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வியது. சில மாதங் களுக்கு முன்பு கர்நாடாகாவிலும் அதே கதை. காங்கிரஸ் மீது மக்களுக்கு இருக்கும் கசப்பு உணர்வு மேலும் அதிகரித்து விட்ட நிலையில்... தேர்தல் பத்து மாதம் கழித்தே நடந்தாலும், காங்கிரஸால் எப்படிக் கரை ஏறமுடியும்?

இங்குதான் சோனியா காந்தியிடம் ஏற்பட்டுவரும் முக்கியமான ஒரு மாற்றத்தை ஜன்பத்காரர்கள் வெளியிடுகிறார்கள். ''நம்பிக்கை ஓட்டெப்புக்கு முன்பு இருந்த சோனியா வேறு! அதற்குப்பிறகு இருக்கும் சோனியா வேறு! அவர் மெள்ள மெள்ள இந்திரா காந்தியாக மாறிவருகிறார்!'' என்று சொல்லும் இவர்கள்,

''உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாட காவில் நடைபெற்றுவரும் மாயாவதி மற்றும் எடியூரப்பாவின் ஆட்சிகளை அதிரடியாகக் கவிழ்க்க காங்கிரஸ் இப்போது இறங்கியிருக்கிறது'' என்கி றார்கள்.

''நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது முலாயம் சிங் யாதவ் கட்சியிலிருந்தே ஆறு எம்.பி-க்களை சுவாஹா செய்தவர் மாயாவதி. அவர் கட்சியை உடைக்க முடியுமா?'' என்று கேட்டால், மாயாவதி மற்றும் எடியூரப்பா ஆகியோரின் ஆட்சியை முடிக்க காங்கிரஸ் வைத்திருக்கும் மாஸ்டர் பிளானையும் நம் முன் விரிக்கிறார்கள் அவர்கள்.

முதல் கட்டமாக... ஊழல் குற்றச்சாட்டு, சொத்துக்குவிப்புவழக்கு, சி.பி.ஐ., வம்பு வழக்கு... என்று மாயாவதி மீது இருக்கும் குற்றசாட்டுகளைக் கிளறுவது. இதனால், அவர் கட்சியில் கலகத்தை ஏற்படுத்தி அவர்களை விட்டே முதல்வரின் ராஜினாமாவைக் கோருவது. அடுத்தகட்டமாக, பகுஜனுக்கு பலமாக இருக்கும் பிராமண இன எம்.எல்.ஏ-க்களைக் கவர, பிராமண இனத் தலைவரும் மாயாவதி அரசின் 'நம்பர் டூ'வுமான சத்திஷ் சந்திராவுக்கு முதல்வர் பதவி ஆசை காட்டுவது.

இதேபோல் கர்நாடகாவுக்கும் பிளான் ரெடி! நம்பிக்கை ஓட்டெப்பில் கட்சி மாறி ஓட்டுப்போட்ட பி.ஜே.பி. எம்.பி-யான சாங்கிலியானா புகழ் பெற்ற போலீஸ் அதிகாரியாக இருந்தவர். இவருக்கு பெங்களூருவைச் சுற்றி இருக்கும் தொகுதி எம்.எல்.ஏ-க்களிடமும் நல்ல செல்வாக்கு. அவரை அச்சாணியாக வைத்து எடியூரப்பாவின் ஆட்சிக்கு வெடிவைக்க முயற்சி நடக்கிறது!

இந்த 'இரட்டைக் கோபுரத் தாக்குதலை' செப்டம்பருக்குள் செவ்வனே முடித்துவிட்டால் போதும்... இந்த இரண்டு பெரிய மாநிலங்களில் தங்களுக்கு சாதகமான ஆட்சியிருந்தால்... அதுவே, அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது தங்களுக்கு அதிகமான எம்.பி-க்களைப் பெற்றுத் தரும் என்று கணக்குப் போடுகிறது காங்கிரஸ்! இன்னொரு பக்கம் சம்பள கமிஷனின் பரிந்துரை களை இப்போதைக்கு அரசு ஏற்காது என்று செய்திகள் வந்து கொண்டிருந்தாலும், தேர்தலுக்கு முன்பாக அது ஏற்கப்படும் சூழல் தெரிகிறது. ஆக, அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை வாரிக் கொடுப்பது. இலவசத் திட்டங்களை அறிவிப்பது... என்று தேர்தல் 'பம்பர் பரிசு' திட்டங்களும் காங்கிரஸ் வசம் இருக்கிறது.

சரி... இந்த நெருக்கடியில் ராஜீவின் ரத்தங்களில் ஒன்றைக் களத்தில் இறக்காமல் எதற்கு மீண்டும் மன்மோகன்சிங் பெயரையே பரிந்துரை செய்கிறார் சோனியா..?

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி! மூன்றாவது அணியில் மாயாவதி! ஆகவே, பிரதமர் வேட்பாளர் பெயரை அறிவிக்கவேண்டிய கட்டாயத்துக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுவிட்டது. நம்பிக்கை ஓட்டெப்பின்போது நாடாளுமன்றத்தில் டி.வி. கேமராக்கள் சாட்சியாக நடைபெற்ற கரன்ஸி அபிஷேங்களுக்குப் பிறகும்கூட பிரதமர் மன்மோகன் சிங் இமேஜ் பெரிதாக டேமேஜ் ஆகவில்லை என்று சோனியா நினைக்கிறார். ராகுல் காந்திக்கு இன்னும் போதிய பக்குவம் வரவில்லை என்பதும் அவர் எண்ணம்!

சோனியா கணக்கு மக்களை சொக்க வைக்குமா என்பதை தேர்தல் சமயத்தில் பார்க்கத்தானே போகிறோம்!

விளம்பரம் ரெடி...!

'வெளிநாடுகளில் கோதுமையின் விலை 68.5 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. மன்மோகன் ஆட்சியிலோ வெறும் 8.4 சதவிகிதம்தான் உயர்வு. அரிசியின் விலை சர்வதேச சந்தையில் 169.9 சதவிகிதம் அதிகமாகியிருக்கிறது. ஆனால், இந்தியாவில் வெறும் 8.4 சதவிகிதம்தான் அதிகரித்திருக்கிறது. இதுபோலவே சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாவு ஆகியவை பலமடங்கு உயர்ந்திருக்க, இந்தியாவில் அவை எவ்வளவு குறைவாக உயர்ந்திருக்கிறது பாருங்கள்...' -இப்படியெல்லாம் பட்டியலிட்டு மக்களுக்கு 'சர்வதேசப் பொருளாதாரம்' பற்றி பாடம் எடுத்து ஓட்டு வாங்கவும் காங்கிரஸ் நினைக்கிறது. இதுமாதிரி விஷயங்களை விளம்பரம் செய்ய செய்தி மற்றும் விளம்பரத் துறையின் மூலம் சுமார் ஐம்பது கோடியை மத்திய அரசு செலவுசெய்யத் திட்டமும் தீட்டியிருக்கிறதாம்!

- பி.ஆரோக்கியவேல்