ராஜா ரகளை பேட்டி...

''பி.ஜே.பி.-க்கு தாவலா?''

அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட என்.கே.கே.பி.ராஜாவைச் சுற்றி அரசியல் வட்டாரத்தில் ஏகப்பட்ட விமர்சனங்கள் சுழன்று வருகின்றன. 'பதவி நீக்கப்பட்டதையடுத்து அவர், பி.ஜே.பி-க்குப் போகப் போகிறார்' எனத் தகவல்கள் பரவ, 'அது நிஜமோ?' என எண்ணும்படி கடந்த 10-ம் தேதி ஜெய்ப்பூருக்குப் பறந்தார் ராஜா. இதையடுத்து 'ஜெய்ப்பூரிலிருந்து டெல்லி சென்று பி.ஜே.பி. தலைவர்களை சந்திக்கப் போகிறார்' என மேலும் பற்றி எரிந்தன ராஜா பற்றிய யூகங்கள்.

இந்த நிலையில், ஜெய்ப்பூரில் இருக்கும் என்.கே.கே.பி.ராஜாவை 11-ம் தேதி மதியம் செல்போனில் தொடர்புகொண்டு பேட்டி எடுத்தோம்...

நம்முடைய கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் தந்தார் ராஜா.

''உங்களுடைய திடீர் ஜெய்ப்பூர் பயணத் துக்குக் காரணம் என்ன..?

''இதில் மர்மம் ஒன்றும் இல்லை. குல்லா போட்டுட்டு கண்ணாடி போட்டுக்கொண்டா வந்திருக்கிறேன்? சொந்த வேலையாக ஜெய்ப்பூர் வந்தேன்.

இது பத்து நாட்களுக்கு முன்பே போடப்பட்ட பிளான். வீட்டுக்குத் தேவையான சில பொருட்களை வாங்க வந்தேன். அவ்வளவுதான்... இதில் என்ன மர்மம் இருக்கு?''

''ஆனால், உங்கள் இரண்டாவது மனைவி உமாவின் உறவினர்கள் பி.ஜே.பி-யில் இருப்பதாகவும், ஆகவே நீங்களும் அதில் சேரப்போகிறீர்கள் என்றும் கிசுகிசுக்கப்படுகிறதே?''

''முழுக்க முழுக்க முட்டாள்தனமானது. என் அப்பா கல்லூரியில் படித்த காலத்தி லிருந்து அறுபதாண்டுகளாக திராவிட இயக்கக் கொடியைப் பிடித்த குடும்பத்தில் வந்தவன் நான். அண்ணா, உதயசூரியனை அறிமுகப்படுத்திய காலத்திலேயே எங்கள் குடும்பம் தி.மு.க. குடும்பம். இப்படிப்பட்ட நிலையில் பி.ஜே.பி-யெல்லாம் ஒரு கட்சி என அங்கே போவதற்கு நான் முட்டாளோ... பைத்தியக்காரனோ கிடையாது. நீங்கள் கேள்விப்பட்ட மாதிரி என்னுடைய உறவினர்கள் யாருமே பி.ஜே.பி-யில் இல்லை.''

''பெருந்துறை நிலம் தொடர்பாக ஆள்கடத்தல் விவகாரத்தில் உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாகவும், அதற்காகத்தான் நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை உங்களை நீக்கியிருப் பதாக முதல்வர் சொல்லியிருக்கிறாரே?''

''தலைவர் கலைஞரிடமிருந்து இப்படியரு விமர்சனம் கிடைத்திருக்கிறது. 12-ம் தேதி கோர்ட்டில் வழக்கு வந்தவுடன் என் தரப்பில் பதில் கொடுத்து, அந்த வழக்கிலிருந்து விரைவில் விடுபடுவேன். அதன் பின்பு எல்லா விவரங்களையும் தலைமைக்குச் சொல்வேன். முகாந்திரம் இருக்கிறது என யாரோ என் பெயரைத் தலைவரிடம் சொல்லியிருக்கிறார்கள். நீதிமன்றத்தில் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபித்துவிட்டு, அதன்பிறகு, தலைவர் கலைஞரிடம் போய் சொல்வேன்!''

''அமைச்சரவையிலிருந்து நீக்கப் பட்டதும், 'வீரபாண்டி ஆறுமுகம், சுரேஷ்ராஜன், தா.மோ.அன்பரசன் ஆகியோருக்கு ஒரு நியாயம். எனக்கொரு நியாயமா?' என்று கோபப் பட்டீர்களாமே?''

''சுரேஷ்ராஜன் மீதான புகார், அரசு விழாவில் நடந்ததாக சொல்லப்படும் ஒரு விவகாரம். அன்பரசன் மீதோ ஒரு வழக்கிலிருந்து அவருடைய உறவினரைக் காப்பாற்றினார் என சொல்லப்படுகிறது. அண்ணன் வீரபாண்டியார் தன் மீது வந்த புகார் பற்றி முதலிலேயே விளக்கம் கொடுத்து விட்டார். அதுபற்றியெல்லாம் தலைவர் விசாரணை நடத்திவிட்டார். நான் இரண்டு வருஷமாக அமைச்சராக இருந்தேன். அதற்கு முன்பு, மாவட்டச் செயலாளராக இருந்தேன். அதற்கு முன்பு அப்பா அமைச்சராக இருந்தார். இதெல்லாம் தலைவர் கலைஞரால்தானே..? இப்போது என் மீது நடவடிக்கை எதுவுமே தலைவர் எடுக்கவில்லையே... 'நீதிமன்றத்துல தீர்ப்பு வரும் வரை அதை என்னன்னு பார்த்துட்டு வா' என சொல்லியிருக்கிறார். நான் வேறு... அண்ணன் வீரபாண்டியார் வேறு இல்லை. சுரேஷ்ராஜன் அன்பரசன் எல்லாரையுமே நான் மதிக்கிறேன். எங்களுக்குள் எதற்கு விமர்சனம் செய்துகொள்ளப்போகிறோம்?''

''உங்களுக்கு நெருக்கமான வட்டாரத்திடம், 'கலைஞர் வீட்டுப் பிள்ளைகள் தப்பு செய்யலையா?' என்றுகூட தாங்கள் கேட்டீர்களாமே?''

''அப்படிக் கேட்கிற அளவுக்கு தகுதியோ... அருகதையோ எனக்கு இல்லை. அதெல்லாம் தவறான செய்திகள். எங்களைப் பொறுத்தவரை தலைவர் கலைஞரும், அண்ணன் தளபதியும்தான் எல்லாம்.''

''கடந்த தேர்தலின் போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஜெயிப்பதற்காக, தி.மு.க சார்பில் மைனாரிட்டியான முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த மணிமாறன் என்பவரை கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் நிற்க வைத்து அ.தி.மு.க. அனுதாபியாக இருந்தீர்களாமே?''

''முதலியார் சமுதாயம் ஈரோட்டில் மைனாரிட்டி சமுதாயம் கிடையாது.

மெஜாரிட்டியாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய மரியாதை தரவேண்டும் என்பதற்காக தி.மு.க-வில் அந்த சமுதாயத்துக்கு எப்போதுமே ஒரு பிரதிநிதித்துவத்தைத் தலைவர் கொடுத்துவருகிறார். அப்போது தேர்தலில் நின்ற மணிமாறனுக்குப் பதிலாக வேறு யாராவது நின்றிருந்தால், ஒருவேளை பதினைந்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருப்பார்கள். ஆனால், மணிமாறன் கொடுத்த டஃப் ஃபைட்டில் செங்கோட்டையன் வெறும் இரண்டாயிரத்து ஐந்நூறு வாக்குகள் சொச்சத்தில்தான் ஜெயிக்க முடிந்தது. தி.மு.க. தரப்புக்கு இன்னும் கொஞ்சம் சாதகமாக இருந்திருந்தால், அங்கே தி.மு.க. நிச்சயம் வென்றிருக்கும்...''

''பெருந்துறை விவகாரத்தில் நீங்கள் அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் அ.தி.மு.க. தொழிற்சங்கத் துணைச் செயலாளர் சம்பத்குமாரை ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கியுள்ளாரே?''

(கலகலவென சிரிக்கிறார்) ''ஜெயலலிதா சம்பத்குமாரை நீக்கிய பிறகுதான் அவருடைய படத்தையே பேப்பரில் பார்த்தேன். அவர் கறுப்பா, சிவப்பா என்பதுகூட எனக்குத் தெரியாது. நான் எந்தச் சூழ்நிலையிலும் அ.தி.மு.க-வோடு வியாபார தொடர்பு வைத்துக்கொண்டது கிடையாது. அதற்கான அவசியமும் கிடையாது...''

''ஈரோடு மாவட்டத்தில் உங்களுடைய 'கிங் கேபிள் நெட்ஒர்க்'கில்தான் அனைத்து ஆபரேட்டர்களும் கனெக்ஷன் வாங்கவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறீர்களாம். கோபிச் செட்டிபாளையத்தில் சூப்பர் கேபிள் நெட் ஒர்க் நடத்திவந்தவர்களை மிரட்டி, கேபிள் ஒயர்களையெல்லாம் உங்கள் ஆட்கள் வெட்டி எறிந்தார்களாமே?''

''இன்றைய சூழ்நிலையில் இப்படித்தான் சொல்வார்கள். அது பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால், பவானி, குமாரபாளையம் போன்ற ஊர்களில் ஏற்கெனவே எங்களுடைய 'கிங் டி.வி'-தான் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. சூப்பர் கேபிள் நெட் ஒர்க்கினர்தான் எங்களிடமிருந்து கேபிளை எடுத்தனர். அது வியாபாரம். நீதிமன்றத்தில் அது தொடர்பான வழக்கும் இருக்கிறது. இப்படி ஒன்றையும் இன்னொன்றையும் முடிச்சுப் போட்டுக்கொண்டே போனால் ஒன்றும் செய்யமுடியாது.''

''உங்கள் ஆதரவாளர்கள் பல விவகாரங்களில் தலையிட்டு உங்களுடைய பெயரைக்கெடுத்து விட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?''

''கூட இருப்பவர்கள் என்றைக்குமே எங்களுக்கு பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். சில சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் வரும்போது எதையும் சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும். பொது வாழ்க்கையில் இதையெல்லாம் சந்திக்க சங்கடப்பட்டாலோ இன்னொருவர் மீது பழியை தூக்கிப் போட்டாலோ அது மிகப்பெரிய முட்டாள்தனம்.''

''உங்கள் அப்பா என்.கே.கே.பெரியசாமி ரொம்ப ஜென்டில்மேன். அவரிடம் நிர்வாகத்திறமை இருக்கிறது. ஆனால், நீங்கள் எதிலுமே அராஜகம் செய்வதாக சொல்கிறார்களே?''

''பொதுமக்களோ எங்களுடைய கட்சிக்காரர் களோ யாருமே என்னைப்பற்றி அப்படி சொல் வதில்லை. பொறாமை பிடித்துத் திரியும் சிலர்தான் இப்படியெல்லாம் கிளப்பி விடுகிறார்கள். நான் இதுவரைக்கும் 200 குழந்தைகளுக்கு இருதய ஆபரேஷனுக்காக உதவியிருக்கிறேன். இன்றைக்கும் என்னுடைய சம்பளப்பணத்தில் மாதாமாதம் ஈரோட்டு நற்பணி இயக்கங்களுக்கு செலவிட்டு வருகிறேன். என் மீது அபாண்டம் சொல்பவர்கள் எங்கள் கட்சிக்காரர்கள் யாரும் கிடையாது.''

''அமைச்சர் பதவி போனதிலிருந்து ஸ்டாலினும் முதல்வரும் உங்களை சந்திக்க மறுக்கிறார் களாமே?''

''தலைவரோ தளபதியோ என்னைச் சந்திக்க எந்த காலத்திலேயும் மறுக்கமாட்டார்கள். எதுவானாலும் நேரடியாகக் கூப்பிட்டுத் திட்டுவார்கள். தலைவர்

ஒன்றும் ஜெயலலிதா இல்லையே, போனால் பார்க்காமல் படிக்கட்டில் நிற்கவைத்து திருப்பி அனுப்புவதற்கு! அமைச்சர் பதவி இன்று வரும்... நாளைக்கு போகும். அது என்றைக்குமே எனக்கு இரண்டாம் பட்சம்தான். வரும் 12-ம் தேதி கோர்ட்டில் பதில் தாக்கல் செய்வது தொடர்பான வேலைகளில் இருக்கிறேன். அந்த விஷயத்தை முழுமையாக செய்து முடித்தால்தானே தளபதியை சந்தித்து எல்லாவற்றையும் சொல்ல முடியும். பதவி விடுவிப்பு என்பதை தயவு செய்து பிரச்னை ஆக்காதீர்கள். தலைவர் கலைஞர் யாரை நினைத்தாலும் எடுக்கலாம். யாரையும் அமைச்சராகப் போடலாம். என்னைவிட சீனியர்களுக்குக்கூட இந்த மாதிரி நிலைமை வந்திருக்கிறது. நான் சுத்தமானவன் என நிரூபிக்க வேண்டிய ஒரு காலகட்டம் வந்துள்ளது. அதை நிரூபிப்பேன்.''

''குன்னூரில் செங்கோட்டையனுக்கு நெருக்கமான தொடர்புடையவர்கள் வீட்டை வாங்கினீர்களாமே...''

''நான் குன்னூரில் ஒண்ணரை ஆண்டுக்கு முன்பாக வீடு வாங்கியது உண்மைதான். ஆனால், அந்த வீட்டை என்னிடம் விற்றவர்களுக்கு செங்கோட்டையனோடு தொடர்பிருக்கிறதா... இல்லையா என்பது குறித்தெல்லாம் நான் ஆராய வில்லை. அப்படி இருந்தாலும், அதில் தப்பேதும் இல்லை. ஒரு மனிதனுக்கு சிக்கல் வருகிறது என்ற வுடன் என்னென்னவெல்லாம் சொல்கிறார்கள் பாருங்கள்?''

''நீங்கள் ஜெய்ப்பூருக்கு போயிருக்கும் தகவல் அறிந்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதறிப்போய் உங்களுக்கு போன் போட்டாராமே...?''

''அப்படியெல்லாம் யாரும் பதறிப்போகும் அளவுக்கு நான் எந்த காரியத்தையும் செய்து விடவில்லை. நான் ஊருக்குப் புறப்படுவதற்கு முன்பாகக்கூட அண்ணன் ஆற்காட்டார் என்னிடம் பேசினார். அவரிடம் நான் ஜெய்ப்பூருக்கு சொந்த வேலையாக செல்லும் விவரத்தைக்கூட சொல்லிவிட்டுத்தான் வந்தேன். உண்மை அப்படி இருக்கும்போது, இதில் பதற்றத்துக்கெல்லாம் என்ன அவசியம் வந்தது? இன்னும் கொஞ்ச நாட்கள் நான் ஜெய்ப்பூரில் இருந்தால், இன்னும் என்னென்னவெல்லாம் கிளப்புவார்களோ... விரைவில் ஊருக்கு வந்தாக வேண்டும்!''

- ஏ.முகமது ரஃபி