Published:Updated:

வங்கி வட்டி விகிதம் மேலும் குறையும்: நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை!

வங்கி வட்டி விகிதம் மேலும் குறையும்: நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை!
வங்கி வட்டி விகிதம் மேலும் குறையும்: நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை!

வங்கி வட்டி விகிதம் மேலும் குறையும்: நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை!

வங்கி வட்டி விகிதம் மேலும் குறையும்: நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை!

புதுடெல்லி: வங்கி வட்டி விகிதம் மேலும் குறையும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்), ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி முதல் மூன்று தவணைகளாக மொத்தம் 0.75 சதவீதம் வரை குறைத்துள்ளது. இந்த வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி, கடந்த 2 ஆம் தேதி 0.25 சதவீதம் குறைத்த பிறகு, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்தன. ஆனாலும் மற்ற வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை.

இந்நிலையில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''வரவு-செலவுக் கணக்கில் சாதகமற்ற நிலை, சேமிப்புத் திட்டங்களுக்கு அதிக வட்டி விகிதம் ஆகிய காரணங்களால், சில வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க இயலவில்லை எனத் தெரிவித்தன. ஆனாலும், வங்கிகளின் செயல்பாடுகள் முன்பைவிட நன்றாக இருப்பதால், தற்போதைய சூழல் நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.

அடுத்த சில நாட்களில் அல்லது அடுத்த சில வாரங்களில், சில வங்கிகள் மிகப் பெரிய அளவில் வட்டி விகித்தைக் குறைக்கும். வாராக் கடன்களின் நிலை: நிகழாண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) வாராக் கடன், 5.64 சதவீதத்தில் இருந்து 5.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது மேலும் குறையும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆனாலும், முதல் காலாண்டை மட்டும் வைத்து முடிவு செய்துவிட முடியாது. மேலும், வாராக் கடன் விவகாரத்தில் முன்னேற்றம் கிடைத்துள்ளதா என்பது, அடுத்த 2-3 காலாண்டுகளுக்குப் பிறகே தெரியவரும் என்று வங்கிகள் கணித்துள்ளன.

அதிக அளவில் வாராக் கடன்களை வைத்திருக்கும் வங்கிகளிடம், அதற்கான காரணங்களைக் கேட்டிருக்கிறோம். அடுத்த சில மாதங்களில், இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக ஆராய உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் கடுமையான சவால்களைச் சந்தித்த நமது பொருளாதாரம், தற்போது மீண்டு வருகிறது. நமது பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக சர்வதேச அமைப்புகள் பட்டியலிட்டு இருப்பதால், நாம் கொஞ்சம் திருப்தியடைந்து கொள்ளலாம். எனினும், நமது இலக்கு இன்னும் உயர்வானதாக உள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு