Published:Updated:

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜூன் 21ல் ஜெயலலிதா பிரசாரம்!

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜூன் 21ல் ஜெயலலிதா பிரசாரம்!
ஆர்.கே.நகர் தொகுதியில் ஜூன் 21ல் ஜெயலலிதா பிரசாரம்!

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜூன் 21ல் ஜெயலலிதா பிரசாரம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வரும் 21ஆம் தேதி அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
 

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜூன் 21ல் ஜெயலலிதா பிரசாரம்!

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

அதிமுக சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன் போட்டியிடுகிறார். சுயேச்சையாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்பட பலர் களத்தில் உள்ளனர்.

அமைச்சர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் 50 பேர் தொகுதியில் தீவிரமாக பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதேபோல், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சி.மகேந்திரன் உள்ளிட்ட வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால், ஆர்.கே. நகர் தொகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளரும், முதலவருமான ஜெயலலிதா வரும் 21ஆம் ஆம் அங்கு பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அன்று மாலை 3 மணிக்கு மேல் வீட்டில் இருந்து பிரசார வேனில் புறப்படும் அவர், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, ராயபுரம் ஆகிய 5 இடங்களில் பொதுமக்கள் மத்தியில் பேசி வாக்குசேகரிக்க உள்ளார். ஜெயலலிதா பிரசாரம் செய்யும் இடங்கள் மேலும் 2 அதிகப்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர். ஜெயலலிதா வருகையையொட்டி, ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு