Published:Updated:

பெட்ரோல் விலை உயர்வு: மம்தாவுக்கு காங். பதிலடி

பெட்ரோல் விலை உயர்வு: மம்தாவுக்கு காங். பதிலடி
பெட்ரோல் விலை உயர்வு: மம்தாவுக்கு காங். பதிலடி

புதுடெல்லி, நவ.05,2011

பெட்ரோல் விலை உயர்வு: மம்தாவுக்கு காங். பதிலடி

பொதுமக்கள் மீது அக்கறை கொண்டவராக தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு பதிலடி தந்துள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, லிட்டருக்கு ரூ.1.82 என்ற பெட்ரோல் விலையுயர்வு திரும்பப் பெறப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மூத்த மத்திய அமைச்சர் ஒருவர் அளித்த பேட்டியில், "கடந்த 2010 ஜூன் 25-ல் நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளவில்லை. ஆயினும், அவரது ஒப்புதல் பெறப்பட்டது.

பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமே அளிப்பது என்ற அமைச்சரவை முடிவுக்கு பிறகும் மத்திய அமைச்சரவையில் அவர் நீடித்தார். இந்த விஷயத்தில் ஒருமுறைகூட அமைச்சரவையில் இருந்து விலகுவேன் என்று மிரட்டல் விடுக்கவில்லை.

மம்தா பானர்ஜி தன்னை மக்கள் உரிமைக்காக போராடும் தலைவராக காட்டிக்கொள்வதை கட்டாயமாகக் கொண்டுள்ளார். அவரைப் போன்ற கூட்டணி கட்சித் தலைவர்கள் இருக்கும்போது, பிஜேபி போன்ற எதிர்கட்சிகளே எங்களுக்குத் தேவையில்லை," என்று அந்த மூத்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பெட்ரோல் விலையை உயர்த்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகளில் முக்கிய கூட்டணி கட்சியான தங்களிடம் காங்கிரஸ் கலந்து ஆலோசிப்பதில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார்.

அத்துடன், இந்த விவகாரத்தை முன்வைத்து கூட்டணியில் இருந்து விலகவும் தயாராக இருப்பதாக அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான எதிர்ப்பை காட்டாத நிலையில், பெட்ரோல் விலை உயர்வு விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸின் மிரட்டலால் காங்கிரஸ் கடும் அதிருப்திக்குள்ளாகி இருக்கிறது.