Published:Updated:

டெல்லியில் குப்பையை அகற்றுவதில் ஆம் ஆத்மி- பா.ஜ.க. போட்டா போட்டி!

டெல்லியில் குப்பையை அகற்றுவதில் ஆம் ஆத்மி- பா.ஜ.க. போட்டா போட்டி!
டெல்லியில் குப்பையை அகற்றுவதில் ஆம் ஆத்மி- பா.ஜ.க. போட்டா போட்டி!

டெல்லியில் குப்பையை அகற்றுவதில் ஆம் ஆத்மி- பா.ஜ.க. போட்டா போட்டி!

புதுடெல்லி: டெல்லியில் துப்புரவு பணியாளர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தால், தேங்கி கிடக்கும் குப்பையை ஆளும் ஆம் ஆத்மி கட்சியினரும், பாஜகவினரும்  போட்டி போட்டுக் கொண்டு அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் குப்பையை அகற்றுவதில் ஆம் ஆத்மி- பா.ஜ.க. போட்டா போட்டி!

டெல்லியில் துப்புரவு பணியாளர்கள், கடந்த 10 நாட்களாக நடத்திய வேலை நிறுத்தத்தால் நகரமே நாற்றம் அடிக்க துவங்கியது. பல கட்ட பேச்சுவார்தைகளுக்கு பிறகு டெல்லி அரசின் தலையீட்டை அடுத்து துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததுள்ளது.

இந்த நிலையில் இன்று காலையில் இருந்து துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து ஆம் ஆத்மி கட்சியினரும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாஜகவினரும் போட்டிப்போட்டுக் கொண்டு குப்பைகளை அகற்றினர். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் குப்பையை அகற்றுவதில் ஆம் ஆத்மி- பா.ஜ.க. போட்டா போட்டி!

இதனிடையே, பாஜக அதிகாரத்தில் உள்ள டெல்லி மாநகராட்சி, துப்புரவு பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காததே வேலை நிறுத்தத்திற்கு காரணம் என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

முன்னதாக, துப்புரவு பணியாளர்கள் பிரச்னை குறித்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், அவர்களுக்கான ஊதிய தொகையை உடனே வழங்குமாறு ஆம் ஆத்மி அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளுக்கும், இதற்காக 493 கோடி ரூபாய் வழங்கப்படுவதாக துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அறிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு