Published:Updated:

ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் பார்வையாளர் அதிரடி மாற்றம்!

ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் பார்வையாளர் அதிரடி மாற்றம்!
ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் பார்வையாளர் அதிரடி மாற்றம்!

ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் பார்வையாளர் அதிரடி மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் பார்வையாளர் அதிரடி மாற்றம்!

சென்னை: சென்னை ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல்  பார்வையாளராக இருந்த ராஜு நாராயணசாமி, அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் முதல்வரும், அதிமுக வேட்பாளருமான ஜெயலலிதாவுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மகேந்திரனுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா இந்த தொகுதியில் போட்டியிடுவதால் அனைத்து அமைச்சர்களும், சூறாவளி பிரசாரம் செய்து வருவதோடு, தேர்தல் விதிமுறைகளை மீறி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மகேந்திரன் புகார் கூறியுள்ளார்.  மேலும் தேர்தல் பார்வையாளராக இருக்கும் ராஜு நாராயணசாமி மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் பார்வையாளராக இருந்த ராஜு நாராயணசாமி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் நாகலாந்து ஐஏஎஸ் அதிகாரி ஜோதி கலாஷ், புதிய  தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு