Published:Updated:

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவை பதவி விலக கோருகிறது காங்கிரஸ்!

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவை பதவி விலக கோருகிறது காங்கிரஸ்!
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவை பதவி விலக கோருகிறது காங்கிரஸ்!

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவை பதவி விலக கோருகிறது காங்கிரஸ்!

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவை பதவி விலக கோருகிறது காங்கிரஸ்!

புதுடெல்லி: லலித் மோடிக்கு உதவிய ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலிபுறுத்தி உள்ளது.

ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி மீது நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. 2010 ஆம் ஆண்டு முதல் லண்டனில் வசிக்கும் அவர் இந்திய போலீசாரால் தேடப்பட்டு வருகிறார். இதனிடையே, மனைவியின் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக கடந்த ஆண்டு போர்ச்சுகல் செல்வதற்காக இங்கிலாந்து அரசு லலித்மோடிக்கு பயண ஆவணங்களை வழங்குவதற்கு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் தான், மனிதாபிமான அடிப்படையிலேயே உதவியதாக சுஷ்மா சுவராஜ் கூறினார். இதையடுத்து தலைமறைவு குற்றவாளிக்கு உதவி செய்த சுஷ்மா சுவராஜ் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த லலித் மோடி, ''எனது மனைவிக்கும் வசுந்தரா ராஜேவுக்கும் இடையே 30 ஆண்டுகளாக நெருங்கிய உறவு உள்ளது. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்த பிரச்னையில் எனக்கு சாட்சியம் அளிக்க வசுந்தரா ராஜே வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுபற்றிய விசாரணை நடந்தபோது அவர் முதல்வராக இருந்தார். அதனால், எனக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்கவில்லை. ஆனாலும் அவர் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் நீதிமன்ற ஆவணங்களில் பதிவாகி உள்ளது. எனது மனைவி மினள், வசுந்தரா ராஜேவின் உதவியால்தான் போர்ச்சுக்கலுக்கு கொண்டு செல்லப்பட்டார். இதை யாரும் அறிய மாட்டார்கள்" என்று கூறி உள்ளார்.

பயண ஆவணங்களை பெறுவதற்கு உதவியவர்கள் வரிசையில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவின் பெயரையும் லலித்மோடி குறிப்பிட்டு இருப்பதால், இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் வசுந்தரா ராஜே அளித்ததாக கூறப்படும் ஆதரவு தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், இதுவரை சுஷ்மா சுவராஜ் பதவி விலக வேண்டும் என்று கோரி வந்த காங்கிரஸ், தற்போது வசுந்தரா ராஜேவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷோபா ஓஜா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''பொருளாதார மற்றும் தலைமறைவு குற்றவாளி ஒருவருக்கு பயண ஆவணங்கள் பெற சுஷ்மா சுவராஜுடன் சேர்ந்து உதவி செய்த வசுந்தரா ராஜேவும் பதவி விலக வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது, இந்த தலைவர்களுக்கு உதவி செய்வதாக சந்தேகிக்க தோன்றுகிறது.

பெண் தலைவர்கள் என்பதால் இவர்கள் மீது நாங்கள் குற்றம் சாட்டப்படுவதாக கூறுவது கேலிக்கும், கண்டனத்துக்கும் உரியதாகும். தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை மறைப்பதற்காக இதுபோல் இவர்கள் பெண் என்கிற பிரச்னையை எழுப்புகிறார்கள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு