Published:Updated:

கோரிக்கைகள் நிறைவேறும் வரை பலத்துடன் போராடுங்கள்: ராகுல் காந்தி

கோரிக்கைகள் நிறைவேறும் வரை பலத்துடன் போராடுங்கள்: ராகுல் காந்தி
கோரிக்கைகள் நிறைவேறும் வரை பலத்துடன் போராடுங்கள்: ராகுல் காந்தி

கோரிக்கைகள் நிறைவேறும் வரை பலத்துடன் போராடுங்கள்: ராகுல் காந்தி

கோரிக்கைகள் நிறைவேறும் வரை பலத்துடன் போராடுங்கள்: ராகுல் காந்தி

புதுடெல்லி: கோரிக்கைகள் நிறைவேறும் வரையிலும் ஒருங்கிணைந்து பலத்துடன் போராட வேண்டும் என்று துப்புரவு தொழிலாளர்களை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

டெல்லி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உரிய நேரத்தில் வழங்க வேண்டும். 2003-04 ஆண்டு நிரந்தரப்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். பீம் ராவ் அம்பேத்கர் குடியிருப்புத் திட்டத்தின் கீழ், 20 ஆயிரம் குடியிருப்புகளை துப்புரவுத் தொழிலாளர்களுக்குக் கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றச் சாலையில் டெல்லி மாநகராட்சித் துப்புரவுத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, வால்மீகி சமாஜ் ஆகியவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, ''துப்புரவுத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய அரசு தயக்கம் காட்டி வருகிறது. இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஏழை, எளியோர் போராட முனையும்போது, அரசு வளர்ச்சி குறித்துப் பேசுகிறது. போராட்டத்துக்கான தீர்வு கிடைப்பதில்லை. டெல்லியின் தூய்மைக்காக பணியாற்றி வரும் நீங்கள், கோரிக்கைகள் நிறைவேறும் வரையிலும் ஒருங்கிணைந்து பலத்துடன் போராட வேண்டும்.

இந்தப் போராட்டம் டெல்லியை மட்டும் தூய்மையாக வைத்திருப்பதற்காக நடைபெறவில்லை. இந்த தேசத்தையே தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறுகிறது. துப்புரவுத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் காங்கிரஸ் தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.

பிரதமர் நரேந்திர மோடியும், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் வெற்று வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். அப்படி செய்தால் மாற்றங்கள் நிகழ்ந்துவிடும் என்று நினைக்கின்றனர். வளர்ச்சி என்ற பெயரில் மத்திய அரசும், டெல்லி அரசும் ஏழைகளின் உரிமைகளை பரித்து வருகின்றன" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு