Published:Updated:

இந்தியா திரும்பி சட்டத்தை எதிர்கொள்ள லலித்மோடியை வலியுறுத்தினேன்: சரத்பவார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியா திரும்பி சட்டத்தை எதிர்கொள்ள லலித்மோடியை வலியுறுத்தினேன்: சரத்பவார்

மும்பை: லண்டனில் வசிக்கும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியை சந்தித்து, இந்தியா திரும்பி சட்டத்தை எதிர்கொள்ள வலியுறுத்தினேன் என்று சரத்பவார் கூறி உள்ளார்.

இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''லலித்மோடி பயண ஆவணங்கள் பெற சுஷ்மா சுவராஜ் உதவியது தேவையின்றி பெரிதுபடுத்தப்படுகிறது.

இந்த ஆண்டு மே மாத வாக்கில் லண்டனில் லலித்மோடியை நான் சந்தித்து பேசினேன். அப்போது, இந்தியாவுக்கு திரும்பி வந்து சட்டத்தை எதிர்கொள்ளுமாறு அவரை கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர், என்மீது தொடரப்பட்டு இருக்கும் வழக்குகள் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை.

ஆனால், இந்தியாவில் எனக்கு கொலை மிரட்டல் உள்ளது. அதனால், எனது உயிரைப் பற்றி கவலைப்படுகிறேன் என்றார். ஆனாலும், நீங்கள் நாடு திரும்ப விரும்பினால் இதுபற்றி மத்திய அரசுடன் பேசுகிறேன் என்று அவரிடம் கூறினேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு