Published:Updated:

ஜெயலலிதா அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் என்று மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஹாங்காங்கில் இருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது, விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ள நிலையில், விடுதலையான ஜெயலலிதா முதலமைச்சர் பதவி விகித்து கொண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் விதிமீறல் அதிகமாக நடந்து வருகிறது. அதனை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை. தங்கள் கடமையை தேர்தல் அதிகாரிகள் செய்யவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தல், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலிலும் தேர்தல் கமிஷன் சரியாக தனது கடமையை செய்யவில்லை என்று ஏற்கனவே வெளிப்படையாக கூறி இருந்தோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு