Published:Updated:

ஆர்கேநகர் இடைத்தேர்தலில் ஜூன் 22ல் ஜெயலலிதா பிரசாரம்!

சென்னை: சென்னை ஆர்கேநகர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை முதல்வர் ஜெயலலிதா வரும் 22ஆம் தேதி  மேற்கொள்கிறார். இதனை அதிமுக தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆர்கேநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெட்ரோல் பங்க் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் ஜெயலலிதா, சூரிய நாராயண செட்டிதெரு, வீரராகவன்ரோடு, காசிமேடு பகுதியில் வாக்கு சேகரிக்கிறார்.

இதைத்தொடர்ந்து, திருவொற்றியூர் சாலை, கிராஸ் ரோடு, ஜங்ஷன், அருணாச்சலேஸ்வரர் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் அவர், பின்னர் வைத்தியநாதன்சாலை, வைத்தியநாதன் பாலம், மணலி சாலை எழில்நகரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

முடிவில் திருவொற்றியூர், எண்ணுர் நெடுங்சாலை (ரயில்வே கிராசிங்) பகுதியிலும் ஜெயலலிதா பிரசார உரையாற்றுகிறார்.

இந்த தகவலை அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு