Published:Updated:

காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகுமா?

காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகுமா?
காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகுமா?

காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகுமா?

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி தனது கட்சியின் வரவு-செலவு கணக்குகளை 2013 ஆம் ஆண்டு முதல் ஒப்படைக்காததால், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்திற்கும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது செய்யப்பட்ட செலவு விபரங்களை தாக்கல் செய்யாத சங்மாவின் தேசிய மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், அக்கட்சி பதில் அளிக்காததால், அக்கட்சியின் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், 2013-14 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்யாமல் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த 30 நாட்களுக்குள் கணக்கை ஒப்படைக்க வேண்டும். மேலும், இதுவரை ஒப்படைக்காமல் கால தாமதம் செய்து வந்ததற்கான காரணத்தையும் அளிக்க வேண்டும் என்று ஜூன் 9 ஆம் தேதி தேர்தல் ஆணையம், காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

ஆனால், கட்சிகளின் வரவு-செலவுகளை ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 15 ஆம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கட்சி எழுதிய கடிதத்தில், கட்சிகள் தங்களின் வருமான வரியை தாக்கல் செய்த பிறகு, இந்த கணக்கு விபரம் அவசியமற்றது என குறிப்பிட்டிருந்தது. ஆனால், 2002 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி, கணக்குகளை அவசியம் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சங்மாவின் தேசிய மக்கள் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தற்போது காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு