Published:Updated:

லலித் மோடியுடன் ஹோட்டல் விருந்து: சிக்கலில் சுஷ்மா ஸ்வராஜ்!

லலித் மோடியுடன் ஹோட்டல் விருந்து: சிக்கலில் சுஷ்மா ஸ்வராஜ்!
லலித் மோடியுடன் ஹோட்டல் விருந்து: சிக்கலில் சுஷ்மா ஸ்வராஜ்!

லலித் மோடியுடன் ஹோட்டல் விருந்து: சிக்கலில் சுஷ்மா ஸ்வராஜ்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுடெல்லி: அமலாக்கப் பிரிவால் தேடப்படும் குற்றவாளியான லலித் மோடியுடன் லண்டன் ஹோட்டல் ஒன்றில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விருந்தில் கலந்துகொண்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, மோடி அரசுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, அமலாக்க இயக்குனரகத்தால்  ஐ.பி.எல். முன்னாள் கமிஷனர் லலித் மோடி தேடப்பட்டு வருகிறார்.இந்த முறைகேடுகள் வெளியானதும் லலித் மோடி இங்கிலாந்து சென்றார். மீண்டும் இந்தியா வந்தால் கைது நடவடிக்கை பாயும் என்பதால் லலித் மோடி இந்தியா  திரும்பாமல் லண்டனில் பதுங்கியுள்ளார்.

லலித் மோடியுடன் ஹோட்டல் விருந்து: சிக்கலில் சுஷ்மா ஸ்வராஜ்!

இந்நிலையில், மோடி  போர்ச்சுக்கல் நாட்டிற்கு தன்னுடைய மனைவியைப்  பார்க்க, லண்டனிலிருந்து செல்வதற்காக வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் சுஷ்மா ஸ்வராஜ் உதவியுடன் பாஸ்போர்ட் பெற்றுள்ளார் என்று எதிர்க்கட்சிகள் புகார் கூறிவருகின்றன. அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தனது பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மோடிக்கு பயண அனுமதி வாங்கிக் கொடுத்துள்ளார் என்ற வலுவான குற்றச்சாட்டால் பாஜகவில் பெரும் புயல் அடித்து வருகிறது. இந்தப் பிரச்னைகளில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சிக்கிக்கொண்டுள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

அமைச்சர் சுஷ்மாவை சுற்றி வரும் பிரச்சனைகளுக்கு அவரும் பல்வேறு வகைகளில் பதில் தெரிவித்து வருகிறார்.

தன் மீதான புகார்களுக்கு அமைதி காத்து வந்த சுஷ்மா, அவரின் மகள் பன்சூரி லலித் மோடியின் தயவால் தான் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்து படித்தார் என்ற தகவல்கள் வெளியாதும் கோபம் அடைந்தார். சுஷ்மா ஸ்வராஜ் விடுத்த, 'டுவிட்' செய்தியில், 'என் மகள், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர். அவர் மருத்துவம் படித்ததாக வெளியான தகவல்கள் தவறானவை' என்றார் அதிரடியாக.

இந்நிலையில் லலித் மோடி - சுஷ்மா விவகாரத்தில் நாளுக்கு நாள் புதுப்புது வில்லங்க தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. கடந்த ஆண்டு லண்டன் சென்றிருந்த சுஷ்மா, லலித் மோடியுடன் ஹோட்டல் ஒன்றில் விருந்துண்டதாகவும்  அது இந்தியாவைச் சேர்ந்த, லண்டனில் வாழ் ஹோட்டல் அதிபர் அளித்த விருந்து என்றும், லலித் மோடியுடன் 15 முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து லண்டனில் உள்ள பென்ட்லே ஹோட்டல் அதிபர் ஜோஹிந்தர் சங்கர் கூறுகையில்,"விருந்தில் 12 பேர் கலந்துகொண்டனர்.அதில் சுஷ்மா தனது குடும்பத்தோடு கலந்துகொண்டார்.லலித் மோடியும் விருந்தில் பங்கேற்றார்" என்றார்.

இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ்,ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஒருவரோடு சுஷ்மா எப்படி விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்? என்று கேள்வி எழுப்பி உள்ளது. 

அதே போல, லலித் மோடி  ஐ.பி.எல். கிரிக்கெட் கமிஷனராக இருந்தபோது, பாஜகவைச் சேர்ந்த ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, ஐ.பி.எல்., செலவில் பிரபல நட்சத்திர ஹோட்டலில் தங்கியதாக ஆதாரங்களுடன் செய்திகளை வெளியிட்டன ஆங்கில ஊடகங்கள்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இது தொடர்பாக கூறுகையில், " கடந்த மாதம்  லண்டனில் நான் லலித் மோடியை சந்தித்தேன். அப்போது, 'இந்தியா திரும்புங்கள் வழக்குகளை சந்தியுங்கள்' என கேட்டுக் கொண்டேன். அப்போது அவர், 'வழக்குகளை சந்திக்க எனக்கு பயமில்லை. இந்தியாவில் என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் , "இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் ராஜ்நாத், அருண் ஜெட்லி, எங்கள் கட்சித் தலைவர் அமித் ஷா ஆகியோர் கருத்து தெரிவித்து விட்டனர். புதிதாக நான் கூற ஒன்றுமில்லை. லலித் மோடிக்கு, மனிதாபிமான, கருணை அடிப்படையிலான உதவிகளைத்தான் அமைச்சர் சுஷ்மா செய்தார்" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
 
ஆனால் இந்த சிக்கல் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி,  " லலித்

லலித் மோடியுடன் ஹோட்டல் விருந்து: சிக்கலில் சுஷ்மா ஸ்வராஜ்!

மோடிக்கு அமைச்சர் சுஷ்மா உதவியது மோடிக்கும், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராவுக்கும் இடையே உள்ள தொடர்பு போன்ற தகவல்களை, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து, சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரித்து, உண்மை என்ன என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி ஆளும் கட்சியான ஆம் ஆத்மியோ, "சுஷ்மா, வசுந்தரா ஆகியோர் இனியும் பதவியில் நீடிக்க கூடாது. அவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என்று வலுவாகக் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில்,சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர்  சிதம்பரம் லலித் மோடிக்கு சுஷ்மா உதவியது தொடர்பாக உறுதியான ஏழு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

1. இந்திய குடிமகனான லலித் மோடிக்கு, இந்திய பாஸ்போர்ட் இல்லாத நிலையில், இந்தியா திரும்ப, அங்குள்ள             இந்திய தூதரகத்தை அணுகுமாறு, மத்திய அரசு ஏன் அவருக்கு  அறிவுறுத்தவில்லை?

2. மனிதாபிமான முறையில், ஒரு இந்தியரை பாதுகாக்க  நினைக்கும் மத்திய அரசு, அவருக்கு தற்காலிக இந்திய பாஸ்போர்ட் வழங்க முன்வராமல், பிரிட்டன் பாஸ்போர்ட் பெற்றுத் தர முயற்சித்தது ஏன்?

3. பண மோசடி உள்ளிட்ட புகார்களில் சிக்கியுள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன?

4. பாஸ்போர்ட் முடக்கம் தொடர்பான வழக்கில், டெல்லி  உயர் நீதிமன்றம், மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பு அளித்துள்ளது. அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் செல்லாதது ஏன்?

5. 'லலித் மோடிக்கு எதிராக சதி செய்தோம்' என, எங்கள் மீது குற்றம்சாட்டப்படும் நிலையில், பிரிட்டன் அமைச்சருடன் நான் நடத்திய, கடித விவரங்களை வெளியிட, மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன்?

6. குற்றச்சாட்டுக்கு உள்ளான தனிநபரை காப்பாற்ற, மத்திய அரசு விதிமீறி சலுகை காட்ட காரணம் என்ன?

7. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு, பிரதமர் மோடியின் பதில் என்ன?
 
இப்படி அனைத்துத் தரப்பிலும் இருந்து நெருக்கடியில் நாளுக்கு நாள் சுஷ்மாவுக்கு நெருக்கடிகள்

லலித் மோடியுடன் ஹோட்டல் விருந்து: சிக்கலில் சுஷ்மா ஸ்வராஜ்!

முற்றியுள்ள நிலையில்,பாஜக தலைமை அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அமைச்சர் சுஷ்மா விவகாரத்தில் மகராஷ்டிரா மாநில சிவசேனாவின்  நிலை வேறு மாதிரியாக இருக்கிறது.காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டுப் பலமில்லாதது.ஏனெனில் அது இப்போது ஆளுங்கட்சி இல்லை.

அதனால் இந்தப் பிரச்னை பாஜகவின் உள்ளிருந்தே தூண்டப்பட்டிருக்க வேண்டும்.அந்த தூண்டுதலைச் செய்தவர் யார் என்பதை பிரதமர் மோடி கண்டுபிடித்து பிரச்னையை தீர்க்கவேண்டும் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் சந்தன் மித்திரா, "வசுந்தராரஜே இந்த விவகாரம் குறித்து தெளிவுப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.அவருக்கு இதை எப்படி கையாளவேண்டும் என்றும் தெரியும்" என கூறியிருக்கிறார்.    
    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு