Published:Updated:

பாஜக தலைவர் அமித்ஷாவை சந்திக்க முயலவில்லை: வசுந்தரா ராஜே விளக்கம்!

பாஜக தலைவர் அமித்ஷாவை  சந்திக்க முயலவில்லை: வசுந்தரா ராஜே விளக்கம்!
பாஜக தலைவர் அமித்ஷாவை சந்திக்க முயலவில்லை: வசுந்தரா ராஜே விளக்கம்!

பாஜக தலைவர் அமித்ஷாவை சந்திக்க முயலவில்லை: வசுந்தரா ராஜே விளக்கம்!

பாஜக தலைவர் அமித்ஷாவை  சந்திக்க முயலவில்லை: வசுந்தரா ராஜே விளக்கம்!

ஜெய்ப்பூர்: லலித் மோடிக்கு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரத்தில் சிக்கியுள்ள ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே,பாஜக தலைவர் அமித்ஷாவை சந்திக்க முயலவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  சுஷ்மாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் பாரதீய ஜனதா, வசுந்தரா ராஜே விவகாரத்தில் மௌனமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேச ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே அனுமதி கோரியதாவும், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின. இந்தத் தகவலை அவர் மறுத்து உள்ளார்.

ராஜஸ்தான் மாநில முதல்வர் அலுவலக

பத்திரிகை ஆலோசகர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ராஜே, அமித் ஷாவை சந்தித்து பேச ஆர்வமாக இருந்தார் என்றும் ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது என்றும் சில ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன. இது முற்றிலும் உண்மையற்றது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே செய்தியை வெளியிடுவதற்கு முன்னதாக செய்தி நிறுவனங்கள், அதனை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் அலுவலகம் மீடியாக்களுக்கு அறிவுரையும் வழங்கி உள்ளது.

தலைமறைவு குற்றவாளிக்கு உதவி செய்த சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலகவேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்தி வருகிறது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த லலித் மோடி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவும் தனக்கு உதவினார் என்றும் காங்கிரஸ் அமைச்சர்களும் உதவினார்கள் என்றும் கூறினார்.

எனது மனைவிக்கும், வசுந்தரா ராஜேவுக்கும் இடையே 30 ஆண்டுகளாக நெருங்கிய உறவு உள்ளது. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். எனது மனைவி மினள், வசுந்தரா ராஜேவின் உதவியால்தான் போர்ச்சுக்கலுக்கு கொண்டு செல்லப்பட்டார். இதை யாரும் அறிய மாட்டார்கள்" என்றார்.

பயண ஆவணங்களை பெறுவதற்கு உதவியவர்கள் வரிசையில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவின் பெயரையும் லலித்மோடி குறிப்பிட்டு இருப்பதால் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் வசுந்தரா ராஜே அளித்ததாக கூறப்படும் ஆதரவு தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் இதுவரை சுஷ்மா ஸ்வராஜ் மட்டுமே பதவி விலகவேண்டும் என்று கோரி வந்த காங்கிரஸ் தற்போது தனது கவனத்தை வசுந்தரா ராஜே மீது திருப்பி, அவர் ராஜினாமா செய்யவேண்டும் என்று வற்புறுத்தி உள்ளது இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அடுத்த கட்டுரைக்கு