தங்கதுரை, குட்டிமணி, தேவன் ஆகியோர் 1981 ஏப்ரல் 5-ம் தேதி கைது செய்யப்பட்டனர். 22-ம் தேதி ஜெகன் கைதானார். தொடர்ந்து விடுதலை வீரர்கள் பலர் கைதாயினர்.

1981 செப்டம்பர் இறுதி வாரத்தில் என நினைவு... நீதிமன்ற உத்தரவுடன் குட்டிமணி, தங்கதுரை, தேவன், ஜெகன் ஆகியோரை பனாகொடை ராணுவ முகாமில் சந்திக்க வழக்கறிஞர்களாகிய நால்வர் புறப்பட்டோம். பனாகொடை என்ற இடம் கொழும்பு நகரிலிருந்து 16 மைல் தூரத்தில் இருக்கிறது.

கைதான நாள் முதலாக வழக்கறிஞர்களோ உறவினர்களோ தொடர்புகொள்ள

முடியாதவாறு ராணுவ முகாம்களில் வைத்து விடுதலை வீரர்கள் கொடுமைப் படுத்தப்பட்டனர். சித்ரவதைக் கூடங்களிலிருந்து தப்பித் தவறிக் கசிந்த செய்திகளைக் கேட்டு, ஈழத்தமிழரின் - குறிப்பாக இளைய தலைமுறையினரின் இதயம் கனன் றிருந்தது.

நானோ மிகவும் உணர்ச்சிவசப்படும் பேர்வழி. அந்தக் கனலிலே குளிர் காயவா முடியும்? என் உள்ளம் கனத்திருந்தது.

வெங்கொடுமைக் கூடங்களில் வெந்துகொண்டிருக்கும் வீரர்களை, அவர்கள் கைதாகி ஆறு மாதங்களுக்குப் பிறகு வழக்கறிஞனாகச் சந்திக்கச் செல்கிற என் நெஞ்சிலே கொப்பளிக்கிற ஆவல் ஒரு புறம். இன்னொரு புறத்தில் விடுதலை வேட்கை கொண்ட கல்லூரி மாணவனாக இதே ராணுவ முகாம் கட்டடத்தில் நான் பல்லாண்டுகளுக்கு முன் காவலில் வைக்கப்பட்டிருந்த நினைவுகள். அப்போது ஸ்ரீமா பண்டாரநாயகா அம்மையாரின் ஆட்சி! மறைந்த தமிழ்த் தந்தை செல்வநாயகம், தலைவர் அமிர்தலிங்கம் ஆகியோரும் அப்போது காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அன்று ராணுவ முகாம் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட காலகட்டம். நாம் காவலில் வைக்கப்பட்டிருந்த கட்டடம் எது என்று ஒரு கணம் தடுமாறினேன். உள்ளே புதிய கட்டடங்கள் எத்தனையோ முளைத்துவிட்டன.

சுமார் ஒன்பது மாத கால மாக நாம் உறைந்து உறவாடிய கட்டடத்தை அடையாளம் காண முடியவில்லை. இந்த இடத்துக்கு நான் புதியவனல்ல என்ற எண்ணம், என் நெஞ்சில் ஒருவிதக் கிளர்ச்சியையும் இறுமாப்பையும் தந்தது. எமது வீரர்கள் மீது இழைக்கப்பட்ட சித்ரவதைகள் உண்மை யில் புத்தம் புதிய உத்திகளே. பழைய நினைவுகளின் பனிப்படலத்தை விலக்கிக்கொண்டு புதிய வரலாறு படைக் கப் புறப்பட்ட வீரர் களைக் காண விரைந் தேன்.

'பயங்கரவாதிகள்' என்பது எமது வீர இளைஞர்களுக்கு ஆட்சியாளர் தந்த பட்டம்! அரசு சார்பான பத்திரிகைகளும் வானொலி தொலைக்காட்சிச் செய்திகளும் 'பயங்கரவாதிகள்' என்றே இவர்களைக் குறிப்பிடும். 'பயங்கரவாதிகளின் வழக்கறிஞர்கள் வருகிறார்கள்' என வாசலில் சார்ஜ் ரூமிலிருந்து காவல் முகாமுக்குத் தகவல் கூறியிருந்தார்கள். உள்ளே சிறைக்கூடம் இருந்த கட்டடத்தில் நுழைந்ததும்

பளபளக்கும் இயந்திரத் துப்பாக்கிகளுடன் பரபரக்கும் சிங்களச் சிப்பாய்களின் நடமாட்டம் அதிகரித்திருந்தது. ராணுவ பந்தாக்களும் துப்பாக்கிகளின் 'கிறீச்... கிளிக்...' போன்ற ஓசைகளும் பயங்கரச் சூழ்நிலையை உருவாக்குவதற்கென்றே அவர்கள் பண்ணிய சாகசங்கள். முற்றிலும் அந்நியமான ஓர் அந்தகார நிலை அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தது.

முன் மண்டபத்தில் மூலைக்கு ஒருவராக வழக்கறிஞர் களாகிய எம்மை உட்கார வைத்தனர். துப்பாக்கி தாங்கிய சிப்பாய்கள் கூண்டுக்குள் இருந்த குட்டிமணியை என் முன்னே கொண்டுவந்து நிறுத்தினர். இவ்வாறே ஏனைய வீரர்களும் இதர வழக்கறிஞர்களின் முன் நிறுத்தப் பட்டனர்.

அவர்களுக்கு இருக்கைகள் தரப்படவில்லை. கைகளை விலங்குகள் பிணைத்திருந்தன. போதிய ஆகாரமின்றி நலிந்து, மெலிந்து சடலங்களைப் போலிருந்தனர்.

சித்ரவதைக் கூடங்களில் பல்வேறு கொடுமையான கருவிகளை, தூரிகையாகக் கொண்டு இந்த வீரர்களின் ரத்தத்தில் தோய்த்து வரையப்பட்ட சித்திரங்களைத் தாங்கியிருந்த சடலங்கள். அந்தத் தழும்புகள் தமிழ் ஈழ விடுதலை வரலாற்றின் பரிமாணங்களைக் கூறும்.

மாதக் கணக்கில் கொடுமையின் கோரப் பற்களிடையே சிக்கிச் சீரழிந்தவர்கள், முதன் முதலாகத் தம்மை நோக்கி முறுவலிக்கும் முகங்களைச் சந்திக்கின்றனர். எம்மிடையே பரிமாறிக்கொள்ள முடியாத பரஸ்பர நெகிழ்ச்சி - அகத்திலும் முகத்திலும். குட்டிமணியின் முகத்தை உற்று நோக்கினேன். கண நேரம் மௌனம் சாதித்தார்.

அந்த மௌனம் என் காதை அடைத்தது. அந்த கணப்பொழுதில் ஒரு கோடி சேதிகளை உரத்த குரலில் ஒப்புவித்தார். எங்களுடன் என்ன பேசுகின்றனர் என்பதை, தமிழ் தெரிந்த சிங்களச் சிப்பாய் ஒருவன் காதைத் தீட்டியபடி கேட்டுக்கொண்டிருந்தான். குட்டிமணி கண்ணைச் சிமிட்டி எச்சரித்தார். சற்று ஜாக்கிரதையானேன். சுமார் அரை மணி நேரம் பண்டிதத் தமிழில் சிப்பாய்க்குப் புரியாவண்ணம் பேசிக்கொள்கிறோம். குட்டிமணிக்கு அந்த நடை நன்கு கைவரவில்லையாதலால், என் கேள்விகளுக்கு இரண்டொரு வார்த்தைகள் மூலம் பதில் தருகிறார். 'அன்னவனுக்கு எம்மொழி தேரும் போலும்' என்றேன் நான்.

சற்று உற்றுக் கேட்கிறார். குட்டிமணி வறட்சியுடன்தான் கூறினார். மன நிறைவுடன் பேச முடியவில்லை. எதையெதையோ சுற்றி வளைத்துப் பேசினோம்

எதிரே நிமிர்ந்து பார்த்தேன். தங்கதுரை, வழக்கறிஞர் நண்பர் விவேகானந்தனுடன் பேசிக் கொண்டிருந்தார். இருந்தாலும், அவர் பார்வை என் மீது படிந்திருந்தது. அவரது கீர்த்தி ஏற்கெனவே கேள்வி யுற்றதுதான். நான் அரசியல் அரங்கைச் சேர்ந்தவனாதலால், என்னையும் அவர் அறிவார். மூர்த்திகள் இப்போதுதான் நேரில் சந்திக்கின்றன.

ஆனானப்பட்ட குட்டிமணிக்கே ஞான குரு என்று தங்கதுரை பற்றி நான் கேள்விப் பட்டிருந்ததால், குட்டிமணியைவிட ஆஜானுபாகுவான ஓர் ஆளைச் சந்திப்பேன் என்று எதிர்பார்த்தேன்.

தங்கதுரையின்பலம், அறிவுடன் கூடிய ஆன்ம வலிமைதான் என்பதை உணர்ந்தேன். தங்கதுரை என்னைப் பார்த்து முறுவலித்தார். அந்தப் புன்னகையைப் புரிந்துகொண்டேன்.

கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் சிப்பாயை கவனித்தேன். ''தலைவருடன் சிறிது உரையாடினால் நல்லது!'' - குட்டிமணி கூறினார்.

பொறுப்பாக இருந்த ராணுவ கேப்டனிடம், தங்க துரையுடன் பேச அனுமதி

கேட்டேன். 'ஒரு வழக்கறிஞர் ஒரு கைதியிடம்தான் பேசலாம்' என்று நறுக்காகக் கூறினான். அதற்கு மேல் அங்கு அப்பீல் இல்லை. தங்க துரையின் முகத்தில் கார் கப்பியது.

'வெலாவ ஹறி (நேரம் சரி)' என்று கடிகாரத்தைப் பார்த்து விட்டுக் கடுமையாகக் கூறினான், செவிமடுத்துக்கொண்டு இருந்த சிப்பாய். என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. வாதிப்பதற்கு அது வழக்கு மன்றமா என்ன? பாதி அபிமானமும் மீதி அனுதாபமுமாகக் கலந்து, அத்தனை வீரர்களையும் பரிவுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

'யண்ட யண்ட (போ... போ...)' என்ற கூச்சலுடன் அவர்கள் முதுகில் பிடித்துத் தள்ளியவாறே நால்வரையும் சிப்பாய்கள் உள்ளே இட்டுச் சென்றனர். குறுக்கே நின்ற சுவர்த் திரையைத் தாண்டும்வரை எம்மைத் திரும்பிப் பார்த்தவண்ணமே அந்தத் தமிழ் வீரர்கள் சென்று மறைந்தனர்.

என் நெஞ்சின் சுமையில் ஒரு பாகத்தை ஒரு நெடுமூச்சிலே வெளியே இறக்கிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.

-தொடரும்..