வைகோ தந்திரம்!

தீவிர தத்துவஞானியின் சிந்தனை முகத்தோடு உள்ளே நுழைந்தார் கழுகார்.

''கன்வின்ஸ்... கன்ஃப்யூஸ்... கரப்ட்! இதுதான் அரசியல்வாதி வழக்கமாகக்

கையாளும் மூன்று ஸ்டெப் ஃபார்முலா. தங்கள் கொள்கைகளைச் சொல்லி பிரெயின்வாஷ் பண்ண முயல்வார்கள். ஏற்றுக் கொள்ளாவிட்டால், தப்புத்தப்பான விவரங்களைச் சொல்லி, திசை திருப்பிக் குழப்புவார்கள். அப்படிக் குழப்பவும் முடியாதபோது, நோட் டால் அடித்து ஆளை அமுக்கப் பார்ப் பார்கள்!'' என்று கழுகார் சொல்ல...

''இந்த மூன்று 'சி'யும் பலிக்காமல் போய், 'குளோஸ்' பண்ணுவது என்ற நான்காவது 'சி'யைக் கையாண்ட அரசியல் வாதிகளைக்கூட பார்க்கிறோமே... ஆனால், இதையெல்லாம் இப்போது எதற்குச் சொல்கிறீர்?'' என்றோம்.

''மறைந்த வீர.இளவரசனின் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கு ஜனவரி ஒன்பதாம் தேதி இடைத்தேர்தலாச்சே... ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி கூட்டணிகள் நான் சொன்ன மூன்று ஸ்டெப் ஃபார்முலாவுக்குத் தயாராகிவிட்டன. குறிப்பாக, ஆளுங்கட்சி என்ற முறையில் தங்கள் சாதனைகளைச் சொல்லி மக்களை 'கன்வின்ஸ்' செய்ய முடியும் என்ற நம்பிக்கையை இழந்திருக்கும் தி.மு.க., அடுத்த கட்டமாக அ.தி.மு.க. கூட்டணிக் கூடாரத்தை 'கன்ஃப்யூஸ்' பண்ணும் உபாயத்தில் குதித்திருக்கிறது. கேட்கவே கூசும் படியான 'யசோதர காவியம்' உதாரணத்தை முன்னிறுத்தி முதல்வர் வெளியிட்டிருக்கும் அறிக்கையே இதற்கு உதாரணம். 'சாமரம் வீசி மரியாதை கொடுக்கும் கூடாரமாக தி.மு.க. இருக்க, அதைவிடுத்து காலில் விழுந்தாலும் மதிக்காமல் எட்டி உதைத்து அவமானப்படுத்துகிற அ.தி.மு.க. கூடாரத்தில் வைகோ சரணடைந்து கிடக்கிறார்' என்று இலக்கியத் தொனியோடு இம்சை கொடுக்கிறது அந்த அறிக்கை!''

''பார்த்தோம்!''

''திருமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க. நிற்க விரும்புவதாக ஜெயலலிதா சொன்னதுமே, வைகோ அதற்கு ஒப்புக்கொண்டார். இருந்தாலும், 'உங்கள் கட்சி சீனியர் நிர்வாகிகளிடம் கலந்து பேசிவிட்டுச் சொல்லுங்கள்!' என்று அவகாசம் கொடுத்தே அனுமதி பெற்றார் ஜெயலலிதா. ஆக, அந்தக் கூட்டணித் தலைவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். இருந்தாலும், அவர் களுக்குள் ஏதோ கருத்து பேதம் வந்த மாதிரியும், திருமங்கலம் தொகுதியை வலுக்கட்டாயமாக ஜெயலலிதா பறித்துக்கொண்ட மாதிரியும் தோற்றத்தை உருவாக்கி, ம.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் சோர்வை உருவாக்குவது தான் கருணாநிதி அறிக்கையின் பின்னணியாம்!''

''அடடே...''

''வைகோவும் இதை உடனே உணர்ந்துவிட்டார். திருமங்கலத்தில் போட்டியிட ஆசைப்பட்ட தன் கட்சிக் காரர் அழகுசுந்தரத்திடம் பேசினார். 'நாம் நிற்பதைவிட அவர்களுக்கு விட்டுக்கொடுப்பதே இந்த நேரத்தில் சரியான அணுகுமுறை. தொகுதிக்குள் தேர்தல் வேலை செய்ய வரும் அத்தனை தொண்டர்களிடமும் இதை நீங்களே தெளிவாக விளக்கி உற்சாகப்படுத்துங்கள்!' என்றாராம். உள்ளூர வைகோவின் கணக்கே வேறு என்கிறார்கள். 'கரப்ட்' என்ற மூன்றாவது உபாயத்தின்படி, கட்டுக்கட்டாக நோட்டுகளை இறைத்து எப்படியும் வெற்றி பெற தி.மு.க. முயலும். ஒருவேளை ம.தி.மு.க. நின்று அங்கே தோற்றால், அடுத்து வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டின்போது இதையே ஒரு பலவீனமாக முன்வைத்து, ம.தி.மு.க-வுக்கான ஸீட்களை ஜெயலலிதா குறைக்க முயலுவாரோ என்று யோசித்தாராம் வைகோ. அதேசமயம், கேட்டதுமே விட்டுக்கொடுத்துப் பெருந்தன்மை காட்டினால், கூடுதலாக ஓரிரு ஸீட் பெற முடியுமே என்றும் நினைக்கிறாராம். எந்த நேரமும் பா.ம.க-வும் இந்தக் கூட்டணிக்குள் வரலாம் என்ற நிலையில், ஜெயலலிதாவின் 'குட் புக்'ஸில் இன்னும் அழுத்தமாக இடம்பெற வேண்டிய அவசியமிருக்கிறது வைகோவுக்கு!''

''புரிந்தது!''

''ம.தி.மு.க-வின் அதிகாரபூர்வ பத்திரிகையான 'சங்கொலி'க்கு வரும் வாசகர் கடிதங்கள் வைகோவின் பார்வைக்கு வைக்கப் பட்டு அவர் ஓகே செய்த பிறகே பிரசுரத்துக்குப் போகும். கடந்த வாரம் ஒரு கடிதம் அவரை உற்றுப்பார்க்க வைத்தது. அதில், 'ஈழத் தமிழர் விவகாரத்தை நீங்கள் கையிலெடுத்து உலகமெங்கும் சென்று பேசுவதை சில சக்திகள் விரும்பவில்லை. ஆன்டன்

பாலசிங்கத்தின் இடத்தில் இருந்து நீங்கள் புலிகளின் நிலையை உலகுக்கு விளக்குவது, பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. நீங்கள் விசா வாங்கி விமான டிக்கெட்டும் வாங்கிய பிறகு, பயணம் ரத்து என்று செய்தி பரவச் செய் கிறார்கள். உங்கள் பாதுகாப்பில் கவனம் தேவை' என்று சொன்னதாம் அந்தக் கடிதம். எழுதியவர், ம.தி.மு.க-வின் இளைஞரணி துணைச் செயலாளராக இருக்கும் ராஜேந்திரன்! கடிதத்தைப் படித்து முடித்த வைகோ, கண் மூடி ஏதோ யோசித்துவிட்டு முழுக் கடிதத்தையும் 'சங்கொலி'யில் போடச் சொல்லியிருக்கிறார். இப்போது வைகோவுக்கு அவருடைய கட்சியின் தொண்டரணி, பாது காப்பைக் கூட்டியிருக்கிறது.''

''அப்படியா!''

''அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான கங்குலியைச் சந்தித்து, அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியானதற்கு வாழ்த்துச் சொல்லப்போனார் முதல்வர். அப்போது, 'பல மாநிலங்களில் சட்டத்துறைக்கென தனி அமைச்சர் இருக்கிறார். தமிழ்நாட்டில் மட்டும்தான் மற்ற துறைகளோடு சட்டத்துறையும் இணைக்கப்பட்டிருக்கிறது' என்று சொன்னாராம் கங்குலி. விரைவில்

துரைமுருகனிடம் உபரியாக இருக்கும் சட்டத்துறை, சபாநாயகர் ஆவுடையப்பன் வசம் வரலாம் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். இலாகா இல்லாத அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை சபாநாயகராக உட்கார வைக்கப்போகிறார்களாம். இது தவிர ஐ.பெரியசாமி மற்றும் நேரு வசம் இருக்கும் கூடுதல் துறைகளை ராஜகண்ணப்பன், பிச்சாண்டி, முல்லைவேந்தன், பூங்கோதை ஆகியோருக்கு அளிக்கும் திட்டமும் இருக்கிறதாம்...''

''ம்...''

''திண்டுக்கல்லை அடுத்த கெங்குவார்பட்டி கிராமத்தில், கேரள கம்யூனிஸ்ட்காரர் ஒருவர் கொஞ்சம் நிலம் வாங்கியிருக்கிறார். பக்கத்து நிலத்துக்காரர்கள் அவருக்குத் தொல்லை தர ஆரம்பித்து, இப்போது அவரை அவரது நிலத்துக்குள்ளேயே போக விட வில்லையாம். இந்த மிரட்டலுக்குப் பின்னணியில் இருப்பது ஒரு அமைச்சர்தான் என்று தமிழக கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைக்கு கேரள காம்ரேட் சொல்ல, இதைக் கையிலெடுத்துப் பிரச்னை கிளப்பத் தயாராகிறார்கள் லோக்கல் காம்ரேட்கள்.''

''ஐ..! அடுத்தொரு அமைச்சர் வில்லங்கமா?''

''2005-ம் வருடம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சுமார் இரண்டாயிரம் காவலர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்வு நடத்தப் பட்டது. பொது அறிவுத் தேர்வின் வினாத்தாள்கள் திடீரென லீக்கான தால் தேர்வு ரத்தானது. மீண்டும் அதே தேர்வு நடக்க... அப்போதும் வினாத்தாள் லீக் ஆனது. இதை விசாரித்த சி.பி.ஐ., கடந்த வாரம் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய் திருக்கிறது. இதற்கிடையில், தமிழக மின்வாரிய விஜிலென்ஸ் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி-யான பாலச்சந்திரன், போலீஸ் பயிற்சிக் கல்லூரியின் ஐ.ஜி-யான ராதாகிருஷ்ணன் ஆகிய இருவர் மீதும் கவனக்குறைவாக செயல்பட்டதாகச் சொல்லி, துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப் போகிறார்களாம் போலீஸ் உயரதிகாரிகள். இவர்களைத் தவிர, 19 போலீஸார் உள்ளிட்ட ஏராளமானவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க, சி.பி.ஐ. முஸ்தீபுகளில் இருக்கிறது. மதுரையைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர்தான் வினாத்தாள் அவுட் விவகாரத்தின் முக்கிய ஏஜென்ட்டாகச் செயல்பட்டிருக்கிறாராம். அந்தப் பிரமுகரை முறையாக சி.பி.ஐ. விசாரிக்கவில்லை என காக்கிகள் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்!'' என்றபடியே கழுகார் 'விஷ்க்'!