Published:Updated:

காத்திருந்து... காத்திருந்து..! ராமதாஸ் நையாண்டி!

காத்திருந்து... காத்திருந்து..!  ராமதாஸ் நையாண்டி!
காத்திருந்து... காத்திருந்து..! ராமதாஸ் நையாண்டி!

காத்திருந்து... காத்திருந்து..! ராமதாஸ் நையாண்டி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காத்திருந்து... காத்திருந்து..!  ராமதாஸ் நையாண்டி!

சென்னை: மெட்ரோ ரயில் திட்டம் கடந்த அக்டோபர் மாதத்தில் முடிவடைந்த போதிலும் ஜெயலலிதா திறந்து வைக்க வேண்டும் என்பதற்காக 8 மாதங்களாக காத்துக்கிடந்தது என்றும், இன்று ஜெயலலிதாவின் வருகைக்காக 8 மணி நேரம் அதிகாரிகள் காத்துக்கிடக்கிறார்கள் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ்கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தனது முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பெருநகரத் தொடர்வண்டித்திட்டம் நீண்ட தாமதத்திற்குப் பிறகு இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. ஆலந்தூர்- கோயம்பேடு இடையிலான தொடர்வண்டி சேவையை தொடங்கி வைப்பதுடன் இந்த வழித்தடத்தில் உள்ள தொடர்வண்டி நிலையங்களையும் ஜெயலலிதா இன்று திறந்து வைப்பாராம். இதற்காக பத்திரிகைகளுக்கு பக்கம் பக்கமாக விளம்பரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

காத்திருந்து... காத்திருந்து..!  ராமதாஸ் நையாண்டி!

ஆனால், தொடக்க விழாவுக்காக எந்த பத்திரிகைக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இத்திட்டத்தின் பங்குதாரரான மத்திய அரசின் சார்பில் யாரும் இவ்விழாவுக்கு அழைக்கப்படவில்லை. இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் இத்திட்டத்தின் தொடக்க விழாவுக்கு அழைக்கப்பட வேண்டும். ஆனால், யாரும் அழைக்கப்பட்டவில்லை. இந்த விழாவைப் பொருத்தவரை எல்லாமே அம்மா தான்!

சரி... அது இருக்கட்டும். இன்று எத்தனை மணிக்கு திட்டம் தொடங்கி வைக்கப்படும்? ...... அது யாருக்கும் தெரியாது. அரசு விளம்பரத்தில் இது பற்றி குறிப்பிடப்படவில்லை. இன்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரை எமகண்டமாம். அதன்பின் முதலமைச்சர் எப்போது கோட்டைக்கு வருகிறாரோ, அப்போது காணொலி மூலம் தொடங்கி வைப்பாராம். ஒருவேளை எமகண்டத்திற்கு முன்பே அம்மா வந்து விட்டால் என்ன செய்வது? என்ற அச்சம் காரணமாக அனைத்து அதிகாரிகளும் கோயம்பேடு பணிமனை, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் இடையில் உள்ள ரயில்நிலையங்களில் காலை முதலே காத்துக்கிடக்கிறார்கள். கோயம்பேட்டிலிருந்து புறப்பட உள்ள தொடர்வண்டியிலும், ஆலந்தூரிலிருந்து புறப்படவுள்ள தொடர்வண்டியிலும் ஓட்டுனர்கள் தங்களது இருக்கையில் அசையாமல் காத்திருக்கிறார்களாம். இந்தக் கொடுமைகளை யாரிடம் சொல்வது?

மெட்ரோ ரயில் திட்டம் கடந்த அக்டோபர் மாதத்தில் முடிவடைந்த போதிலும் ஜெயலலிதா திறந்து வைக்க வேண்டும் என்பதற்காக 8 மாதங்களாக காத்துக்கிடந்தது. இன்று ஜெயலலிதாவின் வருகைக்காக 8 மணி நேரம் அதிகாரிகள் காத்துக்கிடக்கிறார்கள். ஆக மொத்தம் ஜெயலலிதாவுக்காக எல்லோரும் காத்துக்கிடக்க வேண்டும் போலிருக்கிறது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.... ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்புவதற்கு!" என்று கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு