Published:Updated:

மோடி இந்தியாவுக்கு பிரதமரா அல்லது இந்தி பேசும் மக்களுக்கு பிரதமரா? - ப.சிதம்பரம் கேள்வி

புதுக்கோட்டை: ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே விவகாரத்தில் பிரதமர் மோடி  மவுனம் காப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நரேந்திரமோடி இந்தியாவுக்கு பிரதமரா? அல்லது இந்தி பேசும் மக்களுக்கு பிரதமரா? என்றும் காட்டமாக கேட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியின் கொடி ஏற்றிவைத்து பல கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

அப்போது ஒரு கூட்டத்தில் பேசிய அவர், “ தேர்தல் முடிந்து ஒரு ஆண்டு முடிந்து விட்ட நிலையில் மத்திய, மாநில அரசுகள் என்ன செய்தார்கள் என வாக்களித்த மக்கள் கேள்வி எழுப்பும் நேரம் வந்து விட்டது. ஒரு ஆண்டு என்பது மொத்த ஆட்சியில் 20 சதவீத ஆட்சி காலம் முடிந்து விட்ட நிலையில், தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை சதவீதம் நிறைவேற்றப்பட்டு உள்ளன என்பதை நம்முடைய பிரதமர் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் நல்ல காலம் பிறக்கும் என முழக்கமிட்டு ஆட்சிக்கு வந்தார் நரேந்திரமோடி. உண்மையில் அவருக்குத்தான் நல்ல காலம் பிறந்து உள்ளது. பா.ஜ.க ஆட்சியில் விவசாயிகளுக்கு நல்ல காலம் இல்லை. நன்கு படித்த எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கவில்லை. 100 நாள் வேலைத்திட்டம் 40 நாளாக சுருங்கி விட்டது. இதில் முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு இட மில்லை.

கடந்த 15 நாட்களாக மகாராஷ்ட்ரா அமைச்சர்கள் மீதும், ராஜஸ்தான் முதலமைச்சர் மீதும் பல்வேறு குற்றச் சாட்டுக்கள் எழுந்து உள்ளன. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது வாய்மூடி மவுனமாக இருந்தார் எனக்கூறிய பிரதமர் நரேந்திரமோடி, கடந்த 15 நாட்களாக மவுனம் காப்பது ஏன்? இது போன்ற செயல்பாடு களால் பா.ஜ.க ஆட்சியில் ஒரு ஆண்டு காலம் வீணாகி விட்டதைப்போல அடுத்த 4 ஆண்டு காலமும் எந்த திட்டமும் நிறைவேறாமல் வீணாகி விடக்கூடாது என்பதே எனது கவலை.

நரேந்திரமோடி இந்தியாவுக்கு பிரதமரா? அல்லது இந்தி பேசும் மக்களுக்கு பிரதமரா? என்று கேள்வி எழுப்பி பேசினார்.

- ர.நந்தகுமார்
(மாணவப் பத்திரிக்கையாளர்)

அடுத்த கட்டுரைக்கு