Published:Updated:

'வெடிச்சு போற கிரைண்டர், ஓடாத ஃபேன், ஷாக் அடிக்கிற மிக்ஸி!'

'வெடிச்சு போற கிரைண்டர், ஓடாத ஃபேன், ஷாக் அடிக்கிற மிக்ஸி!'
'வெடிச்சு போற கிரைண்டர், ஓடாத ஃபேன், ஷாக் அடிக்கிற மிக்ஸி!'

'வெடிச்சு போற கிரைண்டர், ஓடாத ஃபேன், ஷாக் அடிக்கிற மிக்ஸி!'

சேலம்: வெடிச்சு போற கிரைண்டர், ஓடாத ஃபேன், ஷாக் அடிக்கிற மிக்ஸினு தேவையில்லாத பொருட்களை இலவசங்களாக கொடுக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, 2016ல் பா.ம.க ஆட்சி அமைப்பது உறுதி என்று கூறினார்.
 

'வெடிச்சு போற கிரைண்டர், ஓடாத ஃபேன், ஷாக் அடிக்கிற மிக்ஸி!'

சேலத்தில் பா.ம.க மகளில் அணி சார்பில் மதுக்கடைகளை மூடக்கோரி இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, பா.ம.க முதல்வர் வேட்பாளர் அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், "தங்கத்தாலியை கொடுத்துவிட்டு எங்கள் தாலியை அறுக்காதே.., எங்கள் தாலியை அறுத்துவிட்டு இலவசங்களை கொடுக்காதே...  கொலை கொள்ளைக்கு காரணம்.. அம்மா சரக்கு.. அம்மா சரக்கு..." போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அடுத்ததாக பேசிய அன்புமணி, "கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நாம் உணர்ச்சியோடு இங்கு போராட்டம் நடத்துகிறோம். உலகத்திலேயே தமிழகத்தில் மட்டும்தான் சாராயத்திணிப்பு நடக்கிறது. ஆம் இங்கே மக்களுக்கு சாராயத்தை திணிக்கிறார்கள். கடந்த ஆண்டு அரசின் வருமானம் ஒரு லட்சம் கோடி, அதில் 36 ஆயிரம் கோடி ரூபாய் சாராயத்தின் மூலம் வந்துள்ளது. இவர்களுக்கு மக்களின் நலன் பற்றியெல்லாம் கவலை இல்லை. இவர்களுக்கு தேவை உங்களுடைய வருமானம்தான். அதில் சின்ன தொகையை வைத்துதான் வெடிச்சு போற கிரைண்டர், ஓடாத ஃபேன், ஷாக் அடிக்கிற மிக்ஸினு தேவையில்லாத பொருட்களை இலவசங்களாக கொடுக்கிறார்கள்.
 

'வெடிச்சு போற கிரைண்டர், ஓடாத ஃபேன், ஷாக் அடிக்கிற மிக்ஸி!'

சாராயத்தால் 60 சதவிகித விதைவைகள், 5 லட்சம் அனாதை குழந்தைகள் உருவாகியிருக்கிறார்கள். எந்த ஒரு அம்மாவும் தன் பிள்ளை குடிப்பதை விரும்ப மாட்டார்கள். ஆனால் தமிழகத்தில் ஒரு அம்மா இருக்காங்க இன்னும் குடிங்க, இன்னும் குடிங்கனு டாஸ்மாக் கடைகளை திறந்துகிட்டே இருக்காங்க. நாங்கள் தாலிக்கு தங்கம் கொடுக்க மாட்டோம். இருக்கிற தாலியை காப்பாற்றுவோம், மருத்துவர் ஐயா படி படி என்று சொல்கிறார். ஆனால் கருணாநிதியும், ஜெயலலிதாவும் குடி குடி என்று சொல்கிறார்கள்.

மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். இங்கு கூடி இருக்கிற பெண்கள் எல்லாம் சாதாரண பெண்கள் அல்ல, இது முதல் கட்ட போராட்டம்தான். இப்போது அமைதியாக போராடுகிறார்கள். நீங்கள் மதுக்கடைகளை மூடவில்லை என்றால், இவர்களே மூடுவார்கள், அடித்து உடைப்பார்கள். அது என் தலைமையில் நடக்கும். தமிழக மக்கள் பூரண மதுவிலக்கை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அது பா.ம.க போடும் முதல் கையெழுத்தால் மட்டுமே முடியும். 2016ல் பா.ம.க ஆட்சி அமைவது உறுதி" என்றார்.

-எம்.புண்ணியமூர்த்தி

படங்கள் :
பா.காளிமுத்து



 

அடுத்த கட்டுரைக்கு