Published:Updated:

மோடியை மக்கள் ராஜினாமா செய்யக் கோருவார்கள்: காங்கிரஸ் அதிரடி!

மோடியை மக்கள் ராஜினாமா செய்யக் கோருவார்கள்:  காங்கிரஸ் அதிரடி!
மோடியை மக்கள் ராஜினாமா செய்யக் கோருவார்கள்: காங்கிரஸ் அதிரடி!

மோடியை மக்கள் ராஜினாமா செய்யக் கோருவார்கள்: காங்கிரஸ் அதிரடி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மோடியை மக்கள் ராஜினாமா செய்யக் கோருவார்கள்:  காங்கிரஸ் அதிரடி!

புதுடெல்லி: மத்திய அமலாக்கத் துறையால் தேடப்பட்டு வரும் ஐ.பி.எல்.முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்,ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்டவர்கள் உதவிய விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் கலைத்துப் பேசவில்லைஎன்றால் அவரை பதவி விலகுமாறு மக்கள் கோரிக்கை விடுப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.  

இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. பிரதமர் மோடி இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும் என்று வலியுறுத்திவரும் காங்கிரஸ், மீண்டும் ஒருமுறை தனது வலியுறுத்தலை முன் வைத்து உள்ளது.

லலித் மோடி விவகாரம் தொடர்பாக  பிரதமர் மோடி பேசவில்லை என்றால், மக்கள் அவரை ராஜினாமா செய்யுமாறு கேட்பார்கள் என்று கூறியுள்ளது.

பொது வாழ்வில் மக்களின் நம்பிக்கையை அரசியல்வாதிகள் காப்பாற்ற வேண்டும் என்றும், ஹவாலா பிரச்னையில் எனது பெயர் அடிபட்டபோது நான் பதவி விலகினேன் என்றும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  ஞாயிற்றுக்கிழமை வானொலியில் பிரதமர் மோடி உரையாற்றியபோதும் இப்பிரச்னைகள் தொடர்பாக அவர் எதையும் கூறவில்லை.

இந்நிலையில் லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா உதவிய விவகாரத்தை குறிப்பிட்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், “குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு பிரதமர் மோடியுடையது, அவர் தொடர்ந்து மௌனமாக இருந்தால், நாட்டு மக்கள் அவரை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்வார்கள்” என்று கூறியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக சுஷ்மா மற்றும் ராஜேவுக்கு பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்தாலும், பிரதமர் மோடி மற்றும் கட்சியின் தலைவர் அமித் ஷா தொடர்ந்து மௌனமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி நேற்று ரேடியோவில் உரையாற்றிய போது இவ்விவகாரம் இடம்பெறவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. இதற்கு பதில்அளித்து உள்ள பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நலின் கோக்லி “பிரதமர் மோடி என்ன பேசவேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது,” என்று கூறி உள்ளார்.

மேலும் அவர், " லலித்மோடி சர்ச்சை விவகாரமானது காங்கிரஸ் ஆட்சியின்போதே நடைபெற்றது, இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசவேண்டும் " என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு