Published:Updated:

மது அருந்துவது அடிப்படை உரிமை: மத்தியப் பிரதேச அமைச்சர்

மது அருந்துவது அடிப்படை உரிமை: மத்தியப் பிரதேச அமைச்சர்
மது அருந்துவது அடிப்படை உரிமை: மத்தியப் பிரதேச அமைச்சர்

மது அருந்துவது அடிப்படை உரிமை: மத்தியப் பிரதேச அமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மது அருந்துவது அடிப்படை உரிமை: மத்தியப் பிரதேச அமைச்சர்

இந்தூர்: மது அருந்துவது மனிதர்களின் அடிப்படை உரிமை, அது சமூக அந்தஸ்தும் கூட என மத்தியப் பிரதேச  மாநில உள்துறை அமைச்சர்  பாபுலால் கவுர் கூறியுள்ளது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ம.பி. மாநிலம் போபால் நகரத்தில், மதுக்கடைகள் மூடும் நேரத்தை இரவு 10 மணிக்கு பதிலாக  11.30 வரை நீட்டித்து சமீபத்தில்  அரசு உத்தரவிட்டிருந்தது.

இதுதொடர்பாக, அவரிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, "மதுப்பழக்கத்தால் குற்றங்கள் பெருகுவதில்லை. குடித்தபிறகு அவர்கள் சுயநினைவை இழந்து விடுகின்றனர். இதுவே மது செய்யும் குற்றம்.

அளவோடு குடிப்பவர்கள் குற்றங்களை செய்வதில்லை. யாரும் அளவுக்கதிகமாக குடிக்கவே கூடாது. மது குடிப்பது என்பது ஒருவரின் அடிப்படை உரிமையாகும். தற்காலத்தில், அது சமூக அந்தஸ்தும் கூட" என்று பதிலளித்திருந்தார்.

இதற்கு முன்னதாக, சென்னையில் பாலியல் வன்கொடுமைகள்  குறைவாக நடப்பது தொடர்பாக கருத்து வெளியிட்ட இதே அமைச்சர் , "தமிழ்நாட்டு பெண்கள் தங்களது உடலை முழுவதுமாக ஆடைகளுக்குள் மறைத்துக் கொள்வதால் இத்தகைய குற்றங்கள் அங்கு குறைவு" என்று கூறினார்.

மேலும் ரஷ்ய நாட்டை சேர்ந்த தலைவரின் மனைவியிடம் 'வேட்டியை எப்படி உடுத்துவது?' என்பது தொடர்பாக விளக்கம் அளித்த இவர், "படிப்படியாக எப்படி உடுத்துவது என்பது பற்றி சொல்லித்தர என்னால் இயலாது. ஆனால், வேட்டியை எப்படி அவிழ்ப்பது என்று சொல்லித்தர முடியும். அதுவும் இப்போதல்ல..பிறகு" என்று கூறியதற்காக மகளிர் அமைப்புகளிடமிருந்து வசமாக வாங்கிக்கட்டிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு