Published:Updated:

பிள்ளைகளை குடிக்கச் சொல்லும் ஒரே அம்மா ஜெயலலிதாதான்! - அன்புமணி ராமதாஸ்

சேலம்: மதுக்கடைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய, அன்புமணி ராமதாஸ்,“ எந்த ஒரு அம்மாவும் தன் பிள்ளை குடிப்பதை விரும்ப மாட்டார்,  ஆனால் தமிழகத்தில் ஒரு 'அம்மா' இன்னும் குடிங்க இன்னும் குடிங்க என்று டாஸ்மாக் கடைகளை திறந்துகிட்டே இருக்காங்க" என்று குற்றஞ்சாட்டிப் பேசினார்.

சேலத்தில் இன்று பா.ம.க மகளிர் அணி சார்பில் மதுக்கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிள்ளைகளை குடிக்கச் சொல்லும் ஒரே அம்மா ஜெயலலிதாதான்! - அன்புமணி ராமதாஸ்

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்புமணி, “ கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நாம் உணர்ச்சியோடு இங்கு போராட்டம் நடத்துகிறோம். உலகத்திலேயே தமிழகத்தில் மட்டும்தான் சாராயத் திணிப்பு நடக்கிறது. கடந்த ஆண்டு அரசின் வருமானம் ஒரு லட்சம் கோடி. அதில் 36 ஆயிரம் கோடி ரூபாய் சாராயத்தின் மூலம் வந்துள்ளது. இவர்களுக்கு மக்களின் நலன் பற்றி கவலை இல்லை. இவர்களுக்கு தேவை உங்களுடைய வருமானம்தான். அதிலிருந்துதான் கிரைண்டர், ஃபேன், மிக்ஸினு தேவையில்லாத இலவசப் பொருட்களை கொடுக்கிறார்கள்.

சாராயத்தால் 60 சதவிகித விதவைகள், 5 லட்சம் அனாதை குழந்தைகள் உருவாகியிருக்கிறார்கள். எந்த ஒரு அம்மாவும் தன் பிள்ளை குடிப்பதை விரும்ப மாட்டார். ஆனால் தமிழகத்தில் ஒரு அம்மா 'இன்னும் குடிங்க' 'இன்னும் குடிங்க'னு டாஸ்மாக் கடைகளை திறந்துகிட்டே இருக்காங்க.

பிள்ளைகளை குடிக்கச் சொல்லும் ஒரே அம்மா ஜெயலலிதாதான்! - அன்புமணி ராமதாஸ்

நாங்கள் தாலிக்கு தங்கம் கொடுக்க மாட்டோம். இருக்கிற தாலியை காப்பாற்றுவோம். ராமதாஸ் படி படி என்று சொல்கிறார். ஆனால் கருணாநிதியும், ஜெயலலிதாவும் குடி குடி என்று சொல்கிறார்கள்.

மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். மதுவுக்கு எதிராக இது முதல் கட்டப் போராட்டம்தான். இப்போது அமைதியாக போராடுகிறார்கள். நீங்கள் மதுக்கடைகளை மூடவில்லை என்றால், இவர்களே மூடுவார்கள். அடித்து உடைப்பார்கள். அது என் தலைமையில் நடக்கும். தமிழக மக்கள் பூரண மதுவிலக்கை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அது பா.ம.க போடும் முதல் கையெழுத்தால் மட்டுமே முடியும்” என்றார்.

- எம்.புண்ணியமூர்த்தி

படங்கள் : பா.காளிமுத்து

அடுத்த கட்டுரைக்கு