Published:Updated:

ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்: பங்கஜா முண்டே

ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்: பங்கஜா முண்டே
ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்: பங்கஜா முண்டே
ஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்: பங்கஜா முண்டே

மும்பை: என் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அந்த நாளே நான் பதவி விலக தயார் என்று மகாராஷ்டிர அமைச்சர் பங்கஜா முண்டே தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிர மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் பங்கஜா முண்டே, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடலைமிட்டாய், பாய், பென்சில் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்ததில் மின்னணு டெண்டர் இன்றி, விதிமுறைகளை மீறி அரசு அறிவிக்கைகள் வாயிலாக ரூ.206 கோடி வரையிலான ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்ததாகவும், இதில் ஊழல் புரிந்ததாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசில் காங்கிரஸ் புகார் அளித்தது.

மேலும், நீர் பாதுகாப்பு துறையை தன்னிடம் வைத்துள்ள பங்கஜா முண்டே, ஜல்னா மாவட்டத்தில் அணைக்கட்டு ஒன்று கட்டுவதற்கான ஒப்பந்தத்தை, விதிமுறைகளை மீறி தனக்கு வேண்டிய ராஷ்டிரீய சமாஜ் கட்சி நிர்வாகி ரத்னாகர் கட்டேக்கு வழங்கியதாகவும் தற்போது புதிய குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அமைச்சர் பங்கஜா முண்டே மும்பையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''நாங்கள் மேற்கொண்ட கொள்முதல் ஒப்பந்தத்தில், ஒரு ரூபாய் கூட முறைகேடு செய்யவில்லை. என் மீதான குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டது. ஊழல் குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்.

என் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அந்த நாளே நான் பதவியை விட்டு விலக தயார். பா.ஜ.க. அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு தொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கங்கணம் கட்டி கொண்டு திரிகின்றன" என்றார்.