Published:Updated:

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே பதவி விலகமாட்டார்: பா.ஜ.க. திட்டவட்டம்!

விகடன் விமர்சனக்குழு

பாட்னா: ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே பதவி விலகமாட்டார். அவர் தொடர்ந்து முதல்வராக மக்களுக்கு சேவை புரிவார் என்று பா.ஜ.க. திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி நிதி மோசடி வழக்கில் சிக்கி இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அவருடன் தொழில் ரீதியான உறவை ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே கொண்டிருந்ததாக எழுந்துள்ள சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதனால், ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியில் வசுந்தரா ராஜே நீடிக்க கூடாது, அவர் உடனே பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.

இந்நிலையில், பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் ஷனாவஸ் ஹுசைன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவுக்கு எதிரான புகார்கள் அனைத்தும் பொய்யானவை. அவர் தொடர்ந்து முதலமைச்சராக பதவி வகித்து மக்களுக்கு சேவை புரிவார். அரண்மனை குறித்த வழக்கில், வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்திற்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன் பிறகு ஏன் இதை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது?" என்றார்.