Published:Updated:

மத்திய அமைச்சருக்காக பயணிகளை இறக்கிவிட்ட ஏர்-இந்தியா!

மத்திய அமைச்சருக்காக பயணிகளை இறக்கிவிட்ட ஏர்-இந்தியா!
மத்திய அமைச்சருக்காக பயணிகளை இறக்கிவிட்ட ஏர்-இந்தியா!
மத்திய அமைச்சருக்காக பயணிகளை இறக்கிவிட்ட ஏர்-இந்தியா!

புதுடெல்லி: மத்திய அமைச்சர் பயணம் செய்வதற்காக, ஏர்-இந்தியா விமானம் காலதாமதமாக புறப்பட்டது மட்டுமல்லாமல் விமானத்தில் இருந்த மூன்று பயணிகள் இறக்கிவிட்டப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கடந்த மாதம் 24 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார். அதன் பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட தயாரானார். ஆனால், மோசமான வானிலை காரணமாக அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு செல்ல முடியவில்லை. இதை தொடர்ந்து, மாற்று ஏற்பாடாக ஏர்-இந்தியா விமானம் மூலம் அவர் டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார்.

அப்போது, ஏர்-இந்தியா விமானத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் மற்றும் மத்திய அமைச்சரின் உதவியாளர் பயணம் செய்வதற்காக, விமானத்தில் இருந்து மூன்று பயணிகள் இறக்கப்பட்டனர் என்று தகவல் தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், அந்த விமானத்தில் பயணிக்க வேண்டிய அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏறிய பின்பும், மத்திய அமைச்சர் மற்றும் அவருடன் வந்தவர்கள் காலதாமதமாக வந்ததன் காரணமாக விமானம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்திருக்கிறது. இதன் காரணமாக, 10:20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய விமானம், 11.40 மணிக்கு தான் புறப்பட்டு இருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

ஆனால், மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ இதனை மறுத்து உள்ளார். மேலும், விமானம் தன்னால் காலதாமதம் ஆகவில்லை என்றும் தொழில்நுட்பம் காரணமாக விமானம் புறப்பட காலதாமதம் ஏற்பட்டது என்று தெரிவித்து உள்ளார்.