Published:Updated:

பாஜக துஷ்யந்த் சிங் வங்கி கணக்கில் கருப்பு பணம்: காங்கிரஸ் கடுமையான குற்றச்சாட்டு!

பாஜக துஷ்யந்த் சிங் வங்கி கணக்கில் கருப்பு பணம்: காங்கிரஸ் கடுமையான குற்றச்சாட்டு!
பாஜக துஷ்யந்த் சிங் வங்கி கணக்கில் கருப்பு பணம்: காங்கிரஸ் கடுமையான குற்றச்சாட்டு!
பாஜக துஷ்யந்த் சிங் வங்கி கணக்கில் கருப்பு பணம்: காங்கிரஸ் கடுமையான குற்றச்சாட்டு!

ஜெய்பூர்: பாஜக  துஷ்யந்த் சிங் வங்கி கணக்கில் கருப்பு பணத்தைப்  போட்டு வைத்து உள்ளதால் கருப்பு பண விவகாரத்தில் அமைதியாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் குருதாஸ் காமாத், காங்கிரஸ் கமிட்டி தலைவர் சச்சின் பைலட் மற்றும் ராமேஷ்வர் துதியுடன் கோடா-பண்டி- டோங் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அப்போது காமாத் பேசுகையில், பாஜக தேர்தலின்போது கருப்புப் பணம் விவகாரம் தொடர்பாக பேசியது, ஆனால் இப்போது அமைதியாக உள்ளது.ஏனென்றால் “பாரதீய ஜனதா கருப்பு பணத்தை ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் மகன்  துஷ்யந்த் சிங் வங்கி கணக்கில் போட்டு வைத்து உள்ளது ” என்று கூறியுள்ளார்.

“நிதிமோசடி வழக்கில் சிக்கி லண்டனில்உள்ள லலித் மோடியிடம் இருந்து நிதி உதவி பெற்றது தொடர்பாக போதிய ஆதாரம் இருக்கும் நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக  நீடிப்பது மிகவும் துரதிஷ்டவசமானது,” என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

தலைமறைவு குற்றவாளியான லலித் மோடிக்கு உதவியது அரசியல் அமைப்பை அவமதிப்பது ஆகும். ஊழலுக்கு வித்திடுவது ஆகும். ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் அவரது மகன் துஷ்யந்த் சிங்கிற்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

அப்போது ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் பேசுகையில், வசுந்தரா ராஜேவை கடுமையாகச் சாடினார். பாஜக தொடர்ந்து ஊழல் தொடர்பாக பேசிவருகிறது, ஆனால் தற்போது கருப்பு பணம் மற்றும்  பதுக்கி வைத்து உள்ள அதனது தலைவர்களை பாதுகாத்து வருகிறது என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருப்பது தொடர்பாக பைலட் பேசுகையில், ராஜேவுக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவுசெய்ய வேண்டிய அவசியம் உள்ளதால், மோடி  அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், நாடாளுமன்ற தேர்தலின் போது வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ள கருப்பு பணத்தை, பாஜக  ஆட்சி அமைத்த ஒருவருடங்களில்  திருப்பி கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்தது, அதில் அக்கட்சி தோல்வி அடைந்துவிட்டது. விவசாயிகள் தற்கொலையானது மிகவும் முக்கியமான விவகாரம், தண்ணீர், மின்சாரம் மற்றும் உரத் தட்டுப்பாடு விவகாரங்களில் தீர்வு காணப்படாமல் உள்ளது என்று தெரிவித்தார்.