Published:Updated:

ஊசி மணி பாசி மணி இல்லை... உள்ளத்தைக் கவரும் கலைப்பொருட்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஊசி மணி பாசி மணி இல்லை... உள்ளத்தைக் கவரும் கலைப்பொருட்கள்!
ஊசி மணி பாசி மணி இல்லை... உள்ளத்தைக் கவரும் கலைப்பொருட்கள்!

ஊசி மணி பாசி மணி இல்லை... உள்ளத்தைக் கவரும் கலைப்பொருட்கள்!

நாடோடி வாழ்க்கை என்பது இன்றைக்கும் நரிக்குறவ மக்களின் சாபமாக இருப்பது வேதனைக்குரியது. ஆனால் தங்கள் நாடோடிப்பயணத்தின் ஊடே இவர்கள் தங்கள் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டிருக் கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரங்கள் அவர்களால் தயாரிக்கப்பட்ட அணிகலன்கள், வேட்டையாடிய பறவைகள் போன்றவற்றைத்தான் சார்ந்துள்ளது.

இதுதவிர வண்ணக்  கயிறுகள், வாசனை அந்துருண்டைகள், ஊக்குகள் போன்று சிறு சிறுபொருட்களையும் விற்பனை செய்து வருவதை நாம் அன்றாடம் கிராமங்களிலும், நகரங்களிலும் பார்த்து வருகின்றோம்.

ஊசி மணி பாசி மணி இல்லை... உள்ளத்தைக் கவரும் கலைப்பொருட்கள்!

மின் தொடர் வண்டிகள், பேருந்து நிலையங்கள், கடற்கரை, மக்கள் கூடும் இடங்கள் என்றுதான் இவர்களின் வியாபார தலங்கள். தங்க நிலையான இடமும் வாழ நிலையான வருமானமும் இல்லாத இவர்கள் தயாரிக்கும் அணிகலன்கள் மக்களிடம் நிலையான ஒரு இடத்தை பெற்றிருக்கிறது. கலைநயமிக்கதா அவைகளை விரும்பாதார் யாரும் இருக்க முடியாது.

இந்த கலைநயத்தையும், நரிக்குறவ சமூக பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்கள் தயாரிக் கும் அணிகலன்களை மேலும் கலையாக்கி அவற்றை வெளி உலகம் அறியச்செய்யும் பணியைச் செய்து வருகிறது 'தென்னிந்திய பழங்குடியினர்களுக்கான கைவினை கலை மறுவாழ்வு அறக்கட்டளை'. இதன் நிறுவனர் சென்னையைச் சேர்ந்த ஞானசுந்தரி.

நரிக்குறவ இனப் பெண்களின் என்ற பெயரில் பயிற்சி அறக்கட்டளையைத் துவங்கி கடந்த பத்து வருடங்களாக செயல்பட்டுவரும் இவர் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் சென்று களப்பணி ஆற்றி வருகிறார். சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளியின் நிறுவனராகவும் இருக்கும் ஞானசுந்தரியிடம் பேசினோம்,

ஊசி மணி பாசி மணி இல்லை... உள்ளத்தைக் கவரும் கலைப்பொருட்கள்!

'பத்து வருடங்களுக்கு முன்பு இந்த அறக்கட்டளையை துவக்கினேன். சமூகத்தில் இன்னமும் இனம் மொழி மதம் என்ற வேறுபாடு காணப்படுகிறது. நரிக்குறவ சமூகத்தை இன்னமும் பலர் நம்மில் ஒருவராக அங்கீக ரிப்பதில்லை. ஆனாலும் நம் புறக்கணிப்பையும் மீறி அவர்கள் நம்மோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார் கள். இந்த சமூகத்தினர் கலைநயமிக்க பொருட்களை செய்வதில் தேர்ந்தவர்களாக இருப்பவர்கள். உண்மை யில் நம்மில் பலருக்கு அவர்களுடனான தொடர்பு என்பது இந்த கலைப்பொருட்கள் மூலம்தான்.

நாடோடிகளாய் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டாலும் தாழ்வுமனப்பான்மையில் உழலாமல் பொதுவாக நம்மைப்போலவே அங்கு ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் தன்னம்பிக்கையுடன் குடும் பத்தை வழிநடத்துகிறார்கள். ஆனால் பொருளாதார ரீதியான தொடர்புகள் அவர்களுக்கு கிடையாது. இதற்காக துவங்கப்பட்டதுதான் இந்த அறக்கட்டளை.

தாங்கள் தயாரிக்கும் பொருட்களை உரிய லாபத்தில் விற்று அதன் மூலம் பொருளாதார ரீதியான நிறைவு பெறவும், தயாரிக்கும் கலைப் பொருட்கள், அணிகலன்கள் தகுந்த அங்கீகாரம் பெறவும் தமிழகம், டெல்லி, மும்பை, கர்நாடகா போன்ற பல இடங்களிலிருந்து சேகரித்து வரப்படும் சின்ன சின்ன மரப்பொருட்களை கொண்டு பெண்களுக்கான தோடுகள், பாசிகள் போன்ற அணிகலன்களை தயாரிக்கும் பயிற்சியினை நரிக் குறவ பெண்களுக்கு அறக்கட்டளை மூலம் அளித்து வருகிறேன். அரசு தரப்பிலிருந்தும் இதற்கு ஒத்து ழைப்பு கிடைக்கின்றது.

ஊசி மணி பாசி மணி இல்லை... உள்ளத்தைக் கவரும் கலைப்பொருட்கள்!

பயிற்சியில் தேர்ந்த நரிக்குறவப் பெண்களை வைத்தும் கலைப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தமிழ கத்தில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று நரிக்குறவ  பெண்களுக்கு பயிற்சி அளித்து நாள் ஒன்றுக்கு 250 லிருந்து 350 ரூபாய் வரை ஊதியமாக கொடுக்கப்பட்டு வருகிறது. இவர்களால் நேர்த்தியாக  வடிவமைக்கப்பட்ட அணிகலன்களின் விலைகள்  150 ரூபாயிலிருந்து 800 ரூபாய் வரையில் இருக்கின்றன.
 
இவர்களால் செய்யப்படும் அணிகலன்கள் பெரிய பெரிய பிரம்மாண்ட கடைகளில் இருக்கக் கூடிய அணி கலன்களின் கலைநயத்திற்கு ஈடாகவும், நுட்பமானதாகவும் இருக்கும். மேலும் இந்த அணிகலன்கள் பல மாநில கண்காட்சிகளிலும் இடம்பெற்று வருவதோடு வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின் றன. தமிழகத்தில் நடத்தப்படும் பூம்புகார் கண்காட்சிகளில் இவர்களின் படைப்புகள் இல்லாமல் இருக்காது. இதன் மூலம் நரிக்குறவ பெண்கள் மட்டுமின்றி மற்ற பெண்களின் வாழ்க்கையும் பொருளாதார ரீதியாகவும் தன்னம்பிக்கையுடனும் மேன்மை அடைகிறது' என்கிறார் ஞானசுந்தரி, பெருமிதமான குரலில்.

ஊசி மணி பாசி மணி இல்லை... உள்ளத்தைக் கவரும் கலைப்பொருட்கள்!

பொருட்களின் தரத்திற்கு அதன் விளம்பரங்கள்தான் சாட்சி என வணிக உலகம் நம் மனதில் ஏற்றிவைத் துள்ள நம்பிக்கையை அடித்துநொறுக்குகிறது நரிக்குறவ இனப் பெண்களின் இந்த  தயாரிப்புகள். மால்கள், மிக பிரம்மாண்ட கடைகளில் விற்கக் கூடிய அணிகலன்கள்கள்தான் சிறந்தவை, அழகானவை தரமானவை என்ற பார்வையை இந்த பயணிக்கும் சமூக பெண்களும், ஞானசுந்தரியும் முற்றிலுமாக மாற்றி வருகின்றனர்.

பாராட்டுக்கள் பெண்களே!

கு.முத்துராஜா 
   
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு