Published:Updated:

'ரயில் பயணியை நான் அடிக்கவில்லை': ஸ்டாலின் மறுப்பு!

'ரயில் பயணியை நான் அடிக்கவில்லை': ஸ்டாலின் மறுப்பு!
'ரயில் பயணியை நான் அடிக்கவில்லை': ஸ்டாலின் மறுப்பு!

சென்னை: மெட்ரோ ரயில் பயணியை நான் அடிக்கவில்லை என தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நேற்று மெட்ரோ ரயில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்தபோது, பயணி ஒருவரை கன்னத்தில் அடித்தது போன்று பல்வேறு சமூக ஊடகங்களில் வீடியோ காட்சி பரவியது. மேலும், பல்வேறு பத்திரிகைகளிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகின.

'ரயில் பயணியை நான் அடிக்கவில்லை': ஸ்டாலின் மறுப்பு!

இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''அரசியல் ஆதாயம் தேடும் வகையிலும், வெற்று விளம்பரத்திற்காகவும் 1.7.2015 அன்று சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ஸ்டாலின், அந்த ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த செய்தியும், காட்சியும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும். இது போன்று அநாகரிகமாக நடந்துகொள்வது சட்டமன்ற உறுப்பினருக்கு அழகல்ல'' எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், பயணி கன்னத்தில் நான் அடிக்கவில்லை என ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நான் மெட்ரோ ரயிலில் பயணித்த போது பெண் பயணி ஒருவரின் காலை ஒருவர் மதித்துக் கொண்டிருந்தார். எனவே, அந்த நபரை வேறு பக்கமாக செல்லுமாறு கூறினேன். அப்போது என் கை அவர் கன்னத்தில் பட்டது உண்மைதான். ஆனால், நான் அவரை அடிக்கவில்லை. ஒரு கன்னத்தில் அடிப்பது என்றால் எந்தப்புறமாக அடிப்பார்கள் என்பது கூட ஜெயலலிதாவுக்கு தெரியவில்லை. இதற்கு வீடியோ ஆதாரம் என்னிடத்தில் இருக்கிறது.

ஜெயலலிதா நேரடியாக வந்து மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்கு பதிலாக, காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்திருக்கிறார். இது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தன் மீதான அதிருப்தியை மறைப்பதற்காக என் மீது வீண் பழி சுமத்தியுள்ளார்'' எனக் கூறியுள்ளார்.