Published:Updated:

ஏழ்மையை ஒழித்திட வகை செய்யும் கண்டுபிடிப்புகளே அவசியம்: பிரதமர்

ஏழ்மையை ஒழித்திட வகை செய்யும் கண்டுபிடிப்புகளே அவசியம்: பிரதமர்
ஏழ்மையை ஒழித்திட வகை செய்யும் கண்டுபிடிப்புகளே அவசியம்: பிரதமர்
ஏழ்மையை ஒழித்திட வகை செய்யும் கண்டுபிடிப்புகளே அவசியம்: பிரதமர்

புதுடெல்லி: நாட்டில் ஏழ்மை, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை களைவதற்கே படைப்பாற்றலும் புதிய கண்டுபிடிப்புகளும் வழிவகுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

இன்னவோஷன் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் அறிக்கையை டெல்லியில் இன்று வெளியிட்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "விண்வெளி தொழில்நுட்பம், அணு சக்தி மற்றும் ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் புதுப்புது கண்டுபிடிப்புகள் மூலம் நாம் மகத்தான சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறோம்.

ஆனால், இந்தக் கண்டுபிடிப்புகள் அனைத்தும் இதுவரை செல்வந்தர்களின் தேவையைத்தான் வெகுவாக பூர்த்தி செய்து வந்துள்ளனவே தவிர, ஏழைகளின் பிரச்னைகளை குறிப்பிடத்தக்க வகையில் தீர்த்திடவில்லை.

எனவே, இந்த நிலைமை மாற வேண்டும். ஏழ்மையை ஒழிக்கும் வகையில் கண்டுபிடிப்புகள் அமைய வேண்டும். சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளில் கண்டுபிடிப்புகள் பெருக வேண்டும். சுற்றுசூழலை காப்பதற்கு படைப்பாற்றல் வழிவகுக்க வேண்டும்.

இந்தியாவின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை புதிய கண்டுபிடிப்புகளாலும், படைப்பாற்றலாலும் மட்டுமே சந்திக்க முடியும்," என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

ரூ.100 கோடி ஒதுக்கீட்டு..

புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், மத்திய அரசு ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, "பிரதமரின் அனுமதியுடன், இந்தியா இன்குளுசிவ் இன்னொவேஷன் ஃபண்டு-க்கு துவக்க பங்களிப்பாக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுகிறது," என்று தெரிவித்தார்.