Published:Updated:

உ.பி.யை 4 மாநிலங்களாக பிரிக்க நடவடிக்கை: மாயாவதி

உ.பி.யை 4 மாநிலங்களாக பிரிக்க நடவடிக்கை: மாயாவதி
உ.பி.யை 4 மாநிலங்களாக பிரிக்க நடவடிக்கை: மாயாவதி
உ.பி.யை 4 மாநிலங்களாக பிரிக்க நடவடிக்கை: மாயாவதி

லக்னோ: உத்தர பிரதேசத்தை 4 சிறிய மாநிலங்களாக பிரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்று அம்மாநில முதல்வர் மாயாவதி இன்று அறிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விவரிக்கையில், "உத்தர பிரதேசம் 4 மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டியது அவசியம். புந்தெல்காண்ட், அவாத் பிரதேசம், பூர்வாஞ்சல் மற்றும் பாஷிமி பிரதேசம் ஆகிய நான்கு சிறு மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும்.

இதற்காக, நவம்பர் 21-ம் தேதி தொடங்கவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

உத்தர பிரதேச மாநிலத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, நான்கு சிறிய மாநிலங்களாக பிரிக்கும் முயற்சிக்கு பகுஜன் சமாஜ்வாடி கட்சி ஆதரவு தருகிறது.

எங்கள் மாநிலத்தின் நலனுக்காக போதிய நிதிகளை ஒதுக்கீடு செய்யுமாறு பிரதமரை தொடர்ந்து வலியுறுத்திக் கேட்கிறோம். ஆனால், மாநில அரசுக்கு போதிய உதவிகள் கிடைப்பதில்லை.

எனவே, அனைத்து பகுதி மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, உத்தர பிரதேசத்தைப் பிரித்திடம் முடிவு செய்யப்பட்டுள்ளது," என்றார் மாயாவதி. 

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில், 406 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 80 நாடாளுமன்றாத் தொகுதிகளும் உள்ளன.