Published:Updated:

சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜேயுடன் அமித்ஷா முக்கிய ஆலோசனை!

சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜேயுடன் அமித்ஷா முக்கிய ஆலோசனை!
சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜேயுடன் அமித்ஷா முக்கிய ஆலோசனை!

சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜேயுடன் அமித்ஷா முக்கிய ஆலோசனை!

சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜேயுடன் அமித்ஷா முக்கிய ஆலோசனை!

புதுடெல்லி: மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே அகியோரை பா.ஜ.க. தலைவர் அமித்ஷா சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் வியாபம் ஊழல் தொடர்பாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.

மேலும், அவர்கள் பதவி விலக மறுத்தால், அவர்களை நீக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றன. ஆனால், பா.ஜ.க.வும், மத்திய அரசும் அவர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனன. ளை (செவ்வாய்க்கிழமை) தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த பிரச்னையை கிளப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீர்மானித்து உள்ளன.

இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா நேற்று டெல்லியில் இந்த பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ஸ்ம்ரிதி இரானி, ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ரஜே சிந்தியா ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலை தொடர்ந்து எழுந்துள்ள நெருக்கடி பற்றியும், அதை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்திற்கு பிறகு அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு