Published:Updated:

ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்று வழி காட்டியவர் காமராஜர்: மு.க.ஸ்டாலின்

ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்று வழி காட்டியவர் காமராஜர்: மு.க.ஸ்டாலின்
ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்று வழி காட்டியவர் காமராஜர்: மு.க.ஸ்டாலின்

ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்று வழி காட்டியவர் காமராஜர்: மு.க.ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்று வழி காட்டியவர் காமராஜர்: மு.க.ஸ்டாலின்

சென்னை: ஒரு முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என்று இந்திய நாட்டுக்கே வழி காட்டியவர் காமராஜர் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி-தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 113வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, பெருந்தலைவர் மக்கள் கட்சி-தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காமராஜர் உருவப்படத்தை திறந்து வைத்து பேசும்போது, ''இந்திய நாட்டின் பிரதமர்களை உருவாக்கி ''கிங் மேக்கர்'' என்று அழைக்கப்படுகிற மாபெரும் தலைவர் காமராஜர். 20 ஆம் நூற்றாண்டில் தனி இடம் பிடித்த தலைவராக அவர் வாழ்ந்து காட்டி இருக்கிறார். தனது 14வது வயது முதல் 72வது வயது வரை வாழ்நாள் முழுவதும் அரசியலுக்காகவும், நாட்டுக்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். பல முறை சிறைக்கு சென்று வரலாறு படைத்தவர்.

தமிழ்நாட்டில் 1954 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த காமராஜர், ஒரு முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என்று தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்திய நாட்டுக்கே வழிகாட்டியாக, எடுத்துக்காட்டாக விளங்கியவர். தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக, வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் போராடி நிதியை பெற்று வந்தவர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட முதல் முதலமைச்சர் யார் என்றால், அது காமராஜர் தான்.

தமிழ்நாட்டில் 500 மக்கள் தொகை கொண்ட கிராமங்கள், சிற்றூர்களில் பள்ளிக்கூடங்களை திறந்தவர் காமராஜர் என்பதை ஒரு காலமும் மறந்துவிட முடியாது. நோய்வாய்ப்பட்ட நிலையிலும் 1975 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20 ஆம் தேதி என்னுடைய திருமணத்தை காமராஜர் நடத்தி வைத்ததை நான் என்னுடைய வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன்.

1975 ஆம் ஆண்டு காமராஜர் இயற்கை எய்தியபோது கருணாநிதி, காந்தி மண்டபம் அருகே காமராஜர் உடலை அடக்கம் செய்வது தான் அவருக்கு உரிய மரியாதை என்று எண்ணி கொட்டுகிற மழையிலும் வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு தன்னுடைய காரில் காந்தி மண்டபம் சென்று இடத்தை தேர்வு செய்தார். காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியவர் கருணாநிதி. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தான் காமராஜருக்கு சிறப்புகள் செய்யப்பட்டது

தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு மக்களின் வாட்டத்தை பற்றி எண்ணவில்லை, சிந்திக்கவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி சொல்வது போல், செயலற்ற ஆட்சி நடக்கிறது. ஆக இது ஆட்சி இல்லை. வெறும் காட்சி தான். மாற்றத்திற்கான தருணம் விரைவில் வர உள்ளது. அதை பயன்படுத்திகொள்ள உறுதிமொழி எடுத்து கொள்ளும் கூட்டமாக நாம் இந்த கூட்டத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்." என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு