Published:Updated:

முதல்வர் உடல் நலம் பற்றி பேசினால் நாக்கை வெட்டுவேன்: அ.தி.மு.க. எம்.பி. ஆவேசம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ராசிபுரம் : முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து பேசினால், பேசுபவர்களின் நாக்கை வெட்டுவேன் என்று அ.தி.மு.க. எம்.பி சுந்தரம் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முதல்வர் உடல் நலம் பற்றி பேசினால் நாக்கை வெட்டுவேன்: அ.தி.மு.க. எம்.பி. ஆவேசம்!

ராசிபுரத்தில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் அருகே நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய நாமக்கல் தொகுதி எம்.பி. சுந்தரம், ''தமிழகத்தில் எத்தனை பேர் முதல்வர் போட்டிக்கு இருக்கின்றனர் என்றே தெரியவில்லை.

பா.ம.க., கோவையில் மாநாடு நடத்தி, அன்புமணிதான் முதல்வர் என்கிறது. 'டாஸ்மாக்' கடையை மூடுவோம் என்கின்றனர். ஆனால், கோவையில் மாநாடு நடந்த தினத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, ஓய்வெடுக்கச் சொல்கின்றனர். நாங்கள் யாரையும் ஓய்வு எடுக்க சொல்வதில்லை. நான் எம்.பி. என்பதால், நாவை அடக்கி பேசுகிறேன். இனிமேல் யாராவது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை பற்றி பேசினால், நாக்கை வெட்டுவேன்" என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து மைக் பிடித்த, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி , ''எதிர்க்கட்சிகள் தான் அரசியல் நாகரிகம் இல்லாமல் பேசுகின்றனர். அவர்களை போல், நாமும்  பேசக் கூடாது. எம்.பி., பேசியதில் எனக்கு வருத்தம் உள்ளது.  அரசியல் நாகரீகம் அறிந்து நாம் பேச வேண்டும்" என்று அவருக்கு குட்டு வைத்து பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு