Published:Updated:

காணொளி முதலமைச்சர் வேண்டாம்: தமிழிசை கிண்டல்!

காணொளி முதலமைச்சர் வேண்டாம்: தமிழிசை கிண்டல்!
காணொளி முதலமைச்சர் வேண்டாம்: தமிழிசை கிண்டல்!

காணொளி முதலமைச்சர் வேண்டாம்: தமிழிசை கிண்டல்!

சேலம்: எங்களுக்கு காணொளி முதலமைச்சர் வேண்டாம், கண்ணால் காணும் முதலமைச்சர்தான் வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட பா.ஜ.க பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை செளந்திரராஜன் “  சேலத்தையும் ரமேஷையும் பிரித்துப் பார்க்க முடியாது. ரமேஷின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.  ரமேஷ் பொதுச் செயலாளராக இருந்த போது அவரிடம் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, அப்போது நானும் பொதுச்செயலாளராக இருந்தேன், எனக்கு மினிட் எழுத தெரியாது, அதை அவர்தான் கற்றுக்கொடுத்தார்.

காணொளி முதலமைச்சர் வேண்டாம்: தமிழிசை கிண்டல்!

அவர் படுகொலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை, கண்டுபிடிப்பதற்கு  தமிழக அரசும் காவல்துறையும் முன்வரவில்லை.

கொலைசெய்யப்பட்டபோது சிறப்பு புலாய்வு படை என்றெல்லாம் அமைத்தார்கள், அதற்கு அதிகாரிகளையும் நியமித்தார்கள்.  மத்திய தலைமை நிர்வாகிகளான பிரகாஷ் கவுடேக்கர், நிர்மலா சீத்தாராமன் ஆகிய முக்கியமான தலைவர்களோடு வந்து அந்த அதிகாரிகளை சந்தித்து. விசாரணையின் போக்கு எப்படி இருக்க வேண்டும், எங்களுக்கு யார் மீதெல்லாம் சந்தேகம் இருக்கிறது என்றெல்லாம் சொன்னோம்.

ஆனால், இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெரும்பான்மை மக்கள் கொலை செய்யப்பட்டாலும் கேட்க நாதியில்லாத சூழலில் சிறுபான்மை மக்களுக்கு சிறு கீறல் விழுந்தால் கூட கூக்குரல் இடுகின்றன அரசியல் கட்சிகள்.

காணொளி முதலமைச்சர் வேண்டாம்: தமிழிசை கிண்டல்!

பெரும்பான்மை மக்களுக்காக போராடிய  மிகப்பெரிய தலைவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு,  நடவடிக்கை எடுக்க முன்வர மறுக்கிற தமிழக அரசும் , காவல்துறையும் ஆம்பூரில் மிகப் பெரிய  கலவரம் வெடித்தபோது யார் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனென்றால் சிறுபான்மை மக்களின் வாக்கு கிடைக்காது என்பதே. அதே  நாங்கள் சிறிய கூட்டம் நடத்தினால் கூட இந்து பயங்கர வாதம் என்று பெயர்சூட்டி கைது செய்கிறார்கள்.  

ரமேஷின் நினைவஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு கூட  போலீஸார் அனுமதி மறுக்கிறார்கள். பல இடங்களில் ப்ளெக்ஸ்களை அகற்றியிருக் கிறார்கள். இரத்த தான முகாமுக்கு தடை விதிக்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

காணொளி முதலமைச்சர் வேண்டாம்: தமிழிசை கிண்டல்!

இத்தனை மாதங்களாக முடங்கி கிடந்த தமிழக அரசு, ஜெயலலிதா முதல்வராக வந்த பிறகாவது செயல்படும் என்று பார்த்தால் இன்னும் முடங்கிப்போய்க்கொண்டிருக்கிறது, தொழில்துறை முடங்கியிருக்கிறது, அமைச்சர்கள் எல்லோரும் முடங்கிக்கிடக்கிறார்கள். எல்லா திட்டங்களும் காணொளிக் காட்சிமூலமே திறக்கப்படுகின்றன. எங்களுக்கு காணொளி முதலமைச்சர் வேண்டாம், கண்ணால் காணும் முதலமைச்சர்தான் வேண்டும்.

தமிழகத்தில் இந்துகளை காலூன்ற விடமாட்டோம் என்று வைகோ எச்சரிக்கிறார். இந்தியாவின் வரமாக வேரூன்றி இருப்பது இந்து மதம். அதேபோல தமிழகத்தில்  ஆலமரமாக வேரூன்றி பி.ஜே.பி. ஆட்சியை பிடிக்கும் என்றார்.

-எம்.புண்ணியமூர்த்தி
படங்கள் :
பா.காளிமுத்து

அடுத்த கட்டுரைக்கு