Published:Updated:

தலைமைக் காவலரை தாக்கிய அதிமுக எம்எல்ஏ மருமகன்கள்!

தலைமைக் காவலரை தாக்கிய அதிமுக எம்எல்ஏ மருமகன்கள்!
தலைமைக் காவலரை தாக்கிய அதிமுக எம்எல்ஏ மருமகன்கள்!

தலைமைக் காவலரை தாக்கிய அதிமுக எம்எல்ஏ மருமகன்கள்!

தலைமைக் காவலரை தாக்கிய அதிமுக எம்எல்ஏ மருமகன்கள்!

நாகர்கோவில்: வாகன ரோந்தில் ஈடுபட்டு கொண்டிருந்த தலைமைக் காவலரை முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்.எல்.ஏ.வுமான பச்சைமாலின் மருமகன்கள் தாக்கிய சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள இராஜாக்கமங்கலம் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், தலைமைக் காவலர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட காவலர்கள், நாகர்கோவில் தமத்துக் கோணம் அருகே நேற்று முன்தினம் இரவு வாகன ரோந்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, இருசக்கரத்தில் வந்த மகாத்மா தங்கம் என்பவரை பிடித்து அவரிடம் சரியான ஆவணம் இருக்கிறதா? என ஏட்டு கிருஷ்ணகுமார் விசாரித்துள்ளார். அவரிடம் சரியான ஆவணம் இல்லாததால் அதுகுறித்து கேட்டபோது, மாகாத்மா காந்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தனது செல்போனில் பேசி நண்பர்கள் ரமேஷ், கிரம்சி ஆகியோரை சம்பவ இடத்துக்கு தங்கம் வரவழைத்துள்ளார்.

அவர்கள் வந்த வேகத்தில், ஏட்டு கிருஷ்ணகுமாரை தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இது குறித்து ஏட்டு கிருஷ்ணகுமார் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவலர்கள் மகாத்மா தங்கத்தை கைது செய்தனர்.

ரமேஷ், கிரம்சி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் இரண்டு பேரும் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான பச்சைமாலின் மருமகன்கள் என்றும், மகாத்மா தங்கம், பச்சைமாலின் மனைவி செல்வழகியின் சகோதரர் என்றும் தெரிய வந்துள்ளது.

தலைமைக் காவலர் ஒருவரை அதிமுக எம்.எல்.ஏ.வின் மருமகன்கள் தாக்கிய சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-த.ராம்

அடுத்த கட்டுரைக்கு