Published:Updated:

தோல்வியில் முடிவடைந்த அனைத்துக்கட்சி கூட்டம்: அமளிக்கு தயாராகும் எதிர்க்கட்சிகள்!

தோல்வியில் முடிவடைந்த அனைத்துக்கட்சி கூட்டம்: அமளிக்கு தயாராகும் எதிர்க்கட்சிகள்!
தோல்வியில் முடிவடைந்த அனைத்துக்கட்சி கூட்டம்: அமளிக்கு தயாராகும் எதிர்க்கட்சிகள்!

தோல்வியில் முடிவடைந்த அனைத்துக்கட்சி கூட்டம்: அமளிக்கு தயாராகும் எதிர்க்கட்சிகள்!

தோல்வியில் முடிவடைந்த அனைத்துக்கட்சி கூட்டம்: அமளிக்கு தயாராகும் எதிர்க்கட்சிகள்!

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூக நடத்த மத்திய அரசு கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டம் தோல்வியில் முடிவடைந்ததால், அமளிக்கு தயாராகி வருகின்றன எதிர்க்கட்சிகள். 

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை (செவ்வாய்க் கிழமை) தொடங்கி ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக்  கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீர்மானித்து உள்ளன.

இந்நிலையில் ஏற்கெனவே 3 முறை நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்து உள்ளது. இந்த மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வில் உள்ளது. நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா விவசாயிகளுக்கு எதிரானது என்றும், எனவே இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறை வேற்ற விடமாட்டோம் என்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அறிவித்து வருகிறார். எனவே இந்த விவகாரமும் நாடாளுமன்றத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதேபோல் மற்றொரு முக்கிய மசோதாவான சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவும் நிலுவையில் உள்ளது. இந்த மசோதாவும் நாடாளுமன்ற குழுவின் பரிசீலனையில் உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம்  தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை அமல்படுத்துவதில் நரேந்திர மோடி அரசு தீவிரமாக உள்ளது.

காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்  உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பை சமாளிப்பது குறித்து பாஜக ஏற்கெனவே பல முறை ஆலோசித்தது. இந்நிலையில் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக, டெல்லியில் அனைத்து கட்சிகள் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டினார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மேலும் மோடி," நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அனைத்து பிரச்னைகள் தொடர்பாகவும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. அனைத்து பிரச்னைகள் பற்றியும் விவாதிக்க எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வேண்டும். பாராளுமன்ற கூட்டத் தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த மத்திய அரசு உறுதி பூண்டு உள்ளது. நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்"  என்று கூறினார்.

இந்நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஆளும் பா.ஜனதா திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதால், இக்கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, எதிர்க்கட்சிகளின் நிர்ப்பந்த தந்திரங்களுக்கு அரசு அடிபணியாது என்று திட்டவட்டமாக கூறினார்.

இதன் காரணமாக நாளை கூட உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் பெரும் அமளிக்கிடையேதான் தொடங்கும் என்றும், இதனால் அவை சுமூகமாக நடைபெறுவது சந்தேகம்தான் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு